சிலம்பரசனை வைத்து வடசென்னை 2 படமா?.. நெல்சனுக்கு அங்கு என்ன வேலை - பின்னணி உடைக்கும் பிஸ்மி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சிலம்பரசனை வைத்து வடசென்னை 2 படமா?.. நெல்சனுக்கு அங்கு என்ன வேலை - பின்னணி உடைக்கும் பிஸ்மி!

சிலம்பரசனை வைத்து வடசென்னை 2 படமா?.. நெல்சனுக்கு அங்கு என்ன வேலை - பின்னணி உடைக்கும் பிஸ்மி!

HT Tamil HT Tamil Published Jun 22, 2025 06:08 PM IST
HT Tamil HT Tamil
Published Jun 22, 2025 06:08 PM IST

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வட சென்னை 2 திரைப்படம் உருவாகிறது. அந்தப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். -பிஸ்மி பேட்டி!

சிலம்பரசனை வைத்து வடசென்னை 2 படமா?.. நெல்சனுக்கு அங்கு என்ன வேலை - பின்னணி உடைக்கும் பிஸ்மி!
சிலம்பரசனை வைத்து வடசென்னை 2 படமா?.. நெல்சனுக்கு அங்கு என்ன வேலை - பின்னணி உடைக்கும் பிஸ்மி!

இதற்கு பல்வேறு பதில்களும் இணையத்தில் உலாவின. இந்த நிலையில் இதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசினார்.

வடசென்னை யார் கையில்

அதில் அவர் பேசியதாவது, ‘வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வட சென்னை 2 திரைப்படம் உருவாகிறது. அந்தப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை இவர்கள் உட்கார்ந்து பேசி விட்டனர். இதற்கிடையே வடசென்னை 2 திரைப்படத்தில் சிலம்பரசன் நடிக்கிறார் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதில் உண்மை இல்லை.

காரணம் என்னவென்றால் தனுஷின் தயாரிப்பு நிறுவனத்தில் தான் வடசென்னை திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்கிறார். அதனை வெற்றிமாறன் இயக்குகிறார் என்பது பல முறை அவர்களாலே மேடைகளில் சொல்லப்பட்டு விட்டது.

வாய்ப்பில்லை

ஆகையால், சிம்புவும் வெற்றிமாறனும் வடசென்னை 2 திரைப்படத்தில் இணைவதற்கான வாய்ப்புகளே இல்லை. தக் லைஃப் படத்திற்கு பிறகு மணிரத்னமும் சிம்புவும் இணைவதாக இருந்தது. ஆனால் தக் லைஃப் திரைப்படம் தோல்வியடைந்த காரணத்தால் அந்த கூட்டணி முறிந்து விட்டது.

இதற்கிடையே சூர்யாவும் வெற்றி மாறனும் இணைய இருந்த வாடிவாசல் திரைப்படமும் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், அதன் தயாரிப்பாளர் தாணுவிடம் வெற்றிமாறனின் தேதிகள் இருக்கின்றன. அதை வீணாக்கக்கூடாது என்பதற்காகத்தான் வெற்றிமாறனும் சிலம்பரசனும் இணையும் அந்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள் நெல்சன் அந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. வெற்றிமாறனுக்கும் சிலம்பரசனுக்கும் நிச்சயமாக செட் ஆவதற்கு வாய்ப்புகள் இல்லை.

காரணம் என்னவென்றால், சிலம்பரசன் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வரும் பழக்கம் கொண்டவர். வெற்றிமாறன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கதையை மாற்றுபவர். அப்படி இருக்கும் பொழுது இருவரும் சேர்ந்து பயணிக்கிறார்கள் என்பது சிக்கலான விஷயம்தான் ஆனால், வெற்றிமாறனுக்கு கடைசியாக வெளியான விடுதலை 2 திரைப்படமும் சிலம்பரசனுக்கு கடைசியாக வெளியான தக் லைஃப் திரைப்படமும் தோல்வியடைந்தது.

ஆகையால் இருவரும் சகித்துக் கொண்டு ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக சில சிரமங்களை அனுசரித்து பணியாற்றுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்’ என்று பேசினார்.