Ajith Helps Sanjay: அஜித் செய்த இந்த காரியம்! நெகிழ்ந்த சஞ்சய்! பிரபல பத்திரிக்கையாளர் சொன்ன தகவல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Helps Sanjay: அஜித் செய்த இந்த காரியம்! நெகிழ்ந்த சஞ்சய்! பிரபல பத்திரிக்கையாளர் சொன்ன தகவல்!

Ajith Helps Sanjay: அஜித் செய்த இந்த காரியம்! நெகிழ்ந்த சஞ்சய்! பிரபல பத்திரிக்கையாளர் சொன்ன தகவல்!

Suguna Devi P HT Tamil
Jan 13, 2025 12:18 PM IST

விஜயின் மகன் இயக்க இருக்கும் படத்திற்கு நடிகர் அஜித் உதவி செய்வதாக கூறியுள்ளார் என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Ajith Helps Sanjay: அஜித் செய்த இந்த காரியம்! நெகிழ்ந்த சஞ்சய்! பிரபல பத்திரிக்கையாளர் சொன்ன தகவல்!
Ajith Helps Sanjay: அஜித் செய்த இந்த காரியம்! நெகிழ்ந்த சஞ்சய்! பிரபல பத்திரிக்கையாளர் சொன்ன தகவல்!

சஞ்சய்க்கு உதவ வந்த அஜித்

கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த அறிவிப்புகள் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி இருந்தாலும், அதன் படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது, இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் சந்தீப் கிசன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருந்தது. மேலும் முன்னணி நடிகரின் மகனாக இருந்த போதிலும் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இயக்குனராக களம் இறங்கியுள்ள சஞ்சய்க்கும் பல திரைப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பு மேலும் தள்ளிப்போனது. இந்த படப்பிடிப்பு குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை வலைப்பேச்சு அந்தணன் தற்போது தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் விஜயின் மகன் சஞ்சய் சுரேஷ் சந்திராவிற்கு கால் செய்து தயாரிப்பு நிறுவனம் பற்றிய சந்தேகங்களை கேட்டுள்ளார். இந்த நிலையில் அஜித் மேலாளர் ஆன சுரேஷ் சந்திரா சஞ்சய் உடன் பேசிக்கொண்டிருக்கும் போது அஜித்தும் அந்த போனை வாங்கி இயக்குனராக அறிமுகமாகும் சஞ்சய்க்கு வாழ்த்து தெரிவித்து மேலும் தயாரிப்பு நிறுவனங்கள் ஏதேனும் பிரச்சனை செய்தால் கூறலாம். நான் வேறு தயாரிப்பு நிறுவனங்களை பரிந்துரை செய்கின்றேன்" எனவும் அஜித் கூறியதாக அந்தணன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நட்பு பாராட்டும் அஜித்

விஜய் மகனுக்கு அஜித் உதவ வந்ததை பல ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். திரை உலகில் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வருவதாக அவர்களது ரசிகன் ரசிகர்கள் எண்ணி வரும் நிலையில் இந்த செய்தி அவர்களுக்கு இடையே இருக்கும் நட்பை மேலும் உறுதிப்படுத்தி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முந ஒரு விழாவில் கூட அஜித்தின் மகளை விஜய் தூக்கி கொஞ்சுவதும், இருவரும் பரஸ்பரமாக பேசிக்கொள்வதும் தொடர்பான வீடியோ வெளியானது. இந்த நிலையில் அஜித்தின் இந்த செயல் குறித்து அவரது மேலாளர் இடம் இருந்து எந்த தகவலும் வெளியாகிஅவில்லை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.