பாலா போல் தான் அஜித்தும் ஒரு முரடன்.. பாலா சொன்னது பச்சை பொய்.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாலா போல் தான் அஜித்தும் ஒரு முரடன்.. பாலா சொன்னது பச்சை பொய்.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி

பாலா போல் தான் அஜித்தும் ஒரு முரடன்.. பாலா சொன்னது பச்சை பொய்.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி

Marimuthu M HT Tamil
Jan 03, 2025 09:19 PM IST

பாலா போல் தான் அஜித்தும் ஒரு முரடன்.. பாலா சொன்னது பச்சை பொய் என பத்திரிகையாளர் அந்தணன் பேட்டியளித்துள்ளார்.

பாலா போல் தான் அஜித்தும் ஒரு முரடன்.. பாலா சொன்னது பச்சை பொய்.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி
பாலா போல் தான் அஜித்தும் ஒரு முரடன்.. பாலா சொன்னது பச்சை பொய்.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி

இதுதொடர்பாக மீடியா சர்க்கிள் ஊடகத்திற்காக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’தான் அஜித்தை அடிக்கவில்லை என பாலா சொல்லியும் அந்த புகைச்சல் குறையாததற்குக் காரணம், பாலா மீது இருக்கும் முரடன் என்கிற இமேஜ் தான். அவர் வாயில் வந்ததைப் பேசுவார்.

அவர் யாருக்கும் அடங்காத மனிதர் என்கிற இமேஜ் இருக்குது. அதைத் திட்டமிட்டே கூட பாலா உருவாக்கி வைச்சிருக்கலாம். நமக்குத் தெரியாது. ஹீரோவிடம் குளிக்காமல் 10 நாள் நிக்கணும் அப்படினு சொன்னால், அது நடக்காது. பாலா சொன்னால் அது நடக்கும். அப்படியொரு இமேஜை உருவாக்கி வைச்சிருக்கார்.

அப்படிப்பட்ட சூழலில் தான், பாலா அஜித் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அதற்குள் பல பிரச்னைகள் வந்திருக்கு. பாலா அஜித்தை அடிச்சிட்டார் அப்படின்னு எல்லாம் வந்த தகவல் ரொம்ப தவறானது. அப்படியெல்லாம் நடக்கவே இல்லை.

அஜித்தும் ஒரு முரடன் தான்: பத்திரிகையாளர் அந்தணன்!

அப்படி ஒரு சாதாரண ஆள் கிடையாது, அஜித். அஜித்தும் பாலாவுக்கு சமமான ஒரு முரடன் தான். இன்றைக்கு வேண்டுமென்றால் அஜித் குணம் மென்மையாக மாறியிருக்கலாம். ஆனால், அவரும் அப்போது எல்லாம் முரட்டுப்பேர்வழி தான்.

சேது பட ரீமேக்கின்போது ஒரு இந்தி நடிகர் வர தாமதம் ஆனதும் பேக்கப் சொல்லிட்டேன் சொன்னதாக, பாலா சொன்னார். அவர் அஜித்தை சொல்லவில்லை. ஆனால், அப்படி பரப்பிவிடுகின்றனர். அஜித்தை பற்றி கேள்வி கேட்கும்போது, அதை கட் செய்ய சொல்கிறார். ஏனென்றால், வணங்கான் ரிலீஸுக்கு வருது. அஜித் ரசிகர்களை பகைக்கக் கூடாது என பாலா நினைக்கிறார். இதுவே, பழைய பாலாவாக இருந்தால், எதையும் கண்டுக்காம பேசிடுவார்.

பாலா சொன்ன பொய்: பத்திரிகையாளர் அந்தணன்

இப்போது சினிமாவை பாலா புரிஞ்சுக்கிட்டார். அதை ஏன் சொல்றேன் என்றால், சூர்யாவை சூட் செய்யும்போது கூட்டம் அதிகம் ஆவதால், அதை கட்டுப்படுத்தமுடியலை. அதனால், சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகும் சூழல் உருவானது என்பது எவ்வளவு பெரிய பொய்.

ஆர்.ஜே.பாலாஜி படம் கோவையில் எடுத்திட்டு இருக்காங்க. அங்கேயும் கூட்டமாக இருந்து பலர் வேடிக்கை சூர்யா நடிக்கிறதை வேடிக்கைப் பார்த்திட்டு இருக்காங்க.

ரஜினி எவ்வளவு பெரிய ஸ்டார். அவரே லைவ் ஸ்பாட்டில் நடிச்சிட்டு இருக்கார். கிரவுடை கட்டுப்படுத்தலான்ன எப்படி இது சாத்தியம். உண்மையான காரணத்தைப் பாலா சொல்லமுடியாது. அதனால், இப்படி சொல்கிறார்.

விக்ரம் மீது பாலாவுக்கு இருக்கும் கோபம்: பத்திரிகையாளர் அந்தணன்

பாலா 25 நிகழ்ச்சியில் சூர்யா கலந்துகிட்டதால் பாலா நெகிழ்ந்திட்டார். அதனால், அதை வெளிப்படையாக சொல்லல. ஒரு வேளை, அவர் கலந்துக்கிறாமல் இருந்திருந்தால், வணங்கான் படத்தில் சூர்யா நடிக்காமல் போன காரணத்தைச் சொல்லியிருப்பார். ஏனென்றால், விஷால், ஆர்யா, அதர்வா, சசிகுமார், விக்ரம் வரவில்லை.

வந்த ஒரே பெரிய ஆளு, சூர்யா தான். அதனால், அவருக்குண்டான மரியாதையைக் கொடுக்க, இதைச் சொல்லியிருக்கிறார், பாலா.

விக்ரம் தொடர்பான கேள்வியை பாலா சமீபத்திய பேட்டிகளில் தவிர்க்கக் காரணம், அவர் மீது இருக்கும் கோபம் தான். ஏனென்றால், பாலா இல்லையென்றால் விக்ரம் இல்லை. அவ்வளவு செய்திருக்கார். சூர்யா விட்டுக்கொடுக்காமல் வந்தார். அதை ஏன் விக்ரம் செய்யலை. அந்த கோபம் நியாயம் தானே.

விஜய் வரும்போது ஏன் நான் எழுந்து நிக்கணும் கேட்குறது நியாயமானதுதான். இருந்தாலும், அவர் விஜய் பிடிக்கும்ன்னு ரொம்ப கன்வின்ஸிங்காக பதில் சொல்றார்’’ என பத்திரிகையாளர் அந்தணன் பேசியுள்ளார்.

நன்றி: பத்திரிகையாளர் அந்தணன், மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனல்!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.