தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Joshua Imai Pol Kaakha Movie Will Give A Good Cinematic Experience Says Gautham Menon

Joshua: Imai Pol Kaakha:'ஜோஷ்வா இமைபோல் காக்க சினிமா ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்' - கவுதம் மேனன்

Marimuthu M HT Tamil
Feb 29, 2024 10:19 AM IST

ஜோஷ்வா இமைபோல் காக்க திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஜோஷ்வா இமைபோல் காக்க திரைப்படம்
ஜோஷ்வா இமைபோல் காக்க திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கவுதம் மேனன் எழுதி இயக்கிய திரைப்படம், ஜோஷ்வா இமைபோல் காக்க. இப்படத்தில் புதுமுகம் வருண் ஹீரோவாக நடித்துள்ளார். ராஹேய் கதாநாயகியாக நடித்துள்ளார். கழுகு படப்புகழ் ஹீரோ கிருஷ்ணா, முதன்முறையாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினியும் நடித்துள்ளனர். இப்படத்துக்கான பின்னணி இசையை பாடகர் கார்த்திக் அமைத்துள்ளார். இப்படத்துக்காக மூன்று பாடல்களை படக்குழுவினருக்குப் போட்டுக் கொடுத்துள்ளார்.அதில் இரண்டுபாடல்களை, விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே அரவான் படத்துக்கு இசை அமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் கதைச்சுருக்கம்: குந்தவை சிதம்பரம் என்னும் பெரிய இடத்துப் பெண்ணுக்கு உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவரைப் பாதுகாக்கும் பொறுப்பில் பணியமர்த்தப்படுகிறார், ஜோஷ்வா. அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதைச்சுருக்கம். இரண்டு மணி நேரம் 10 நிமிடங்கள், சென்ஷார் வாங்கப்பட்ட இப்படம் யூ/ஏ தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ளது.

மார்ச் 1ஆம் தேதி, நாளை இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்துப் பேசியுள்ள படத்தின் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், ‘வருண் புதுமுக நடிகர் போல் இல்லாமல், படப்பிடிப்புக்கு முன்பே ஆர்வமாகவும் ஆயத்தமாகவும் இருந்தார். இப்படத்தில் காதலும் எமோஷனலும் ஆக்‌ஷனும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்துள்ளது. வருண் படத்தில் வரும் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்துள்ளார். 

கிருஷ்ணாவை என் படத்தில் வில்லனாக நடிக்கவைக்க முயற்சிக்கும்போது சம்மதிப்பாரா என சந்தேகம் இருந்தது. சம்மதித்ததோடு மட்டுமல்லாமல், மிரட்டலாக நடித்திருக்கிறார். மொத்தத்தில் ஜோஷ்வா இமைபோல் காக்க அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் நல்ல சினிமா அனுபவத்தைக் கொடுக்கும்’ என்றார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கவுதம் மேனன் இயக்கியிருந்த ‘துருவ நட்சத்திரம்’திரைப்படம் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகிவிட்டு, இறுதிகட்டப் பிரச்னைகளால் நின்றுபோனது என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்