Pani First Look Poster: நானே ராஜா, நானே மந்திரி.. பானி படம் மூலம் கலக்க தயாரான ஜோஜு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pani First Look Poster: நானே ராஜா, நானே மந்திரி.. பானி படம் மூலம் கலக்க தயாரான ஜோஜு

Pani First Look Poster: நானே ராஜா, நானே மந்திரி.. பானி படம் மூலம் கலக்க தயாரான ஜோஜு

Aarthi Balaji HT Tamil
Published May 29, 2024 10:24 AM IST

Pani First Look Poster: ஜோஜு இயக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் 'பானி' படத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டு உள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர்.

நானே ராஜா, நானே மந்திரி.. பானி படம் மூலம் கலக்க தயாரான ஜோஜு
நானே ராஜா, நானே மந்திரி.. பானி படம் மூலம் கலக்க தயாரான ஜோஜு

இந்த ஆண்டு முழுவதும் மலையாள சினிமா தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உருவாகி இருக்கும் படம், பானி.

நானே ராஜா, நானே மந்திரி

தனது அசாதாரண நடிப்பு மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் விருப்பமான நடிகராக இருந்து வந்த ஜோஜு ஜார்ஜ் இதில் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது நடிப்பின் மூலம் இதுவரை பல ஹிட் படங்களை கொடுத்த ஜோஜு இயக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் 'பானி' படத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டு உள்ளனர். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர். ஜோஜு ஜார்ஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில் இந்த படம் மாஸ், த்ரில்லர், ஆக்சன் வடிவில் தயாராகி வருகிறது.

ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாகும் படங்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் தற்போது அவரது இயக்கத்தில் உருவாகும் 'பானி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து அவரது இயக்கத்தில் வெளியாக போகும் படத்திற்காக காத்து கொண்டு உள்ளனர்.

பானி போஸ்டர்

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 100 நாள் பானி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஜோஜு ஜார்ஜ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து, அவரே இயக்கியும் உள்ளார். படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்க அபிநயா நாயகி கதாநாயகியாக நடித்து உள்ளார்.

மேலும் இப்படத்தில் முன்னாள் பிக் பாஸ் புகழ் சாகர், ஜுனைஸ் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. திரைத்துறைக்கு வந்து 28 வருடம் நடிகனாக இருந்த ஜோஜு ஜார்ஜ் தற்போது இயக்குனராக மாறி உள்ளார். 

பானி பாத்திரங்கள்

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், துணை கதாபாத்திரம், முன்னணி நடிகர், ஹீரோ என ஜொலித்த ஜோஜு ஜார்ஜ் தற்போது இயக்குனராக மாறிய தனது கரியரில் புதிய சாதனைகளை படைக்க உள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா காம்போவில் உருவாக உள்ள படத்திலும் ஜோஜு ஜார்ஜ் நடிக்க உள்ளார். இந்த படத்தை தவிர அனுராக் காஷ்யப்பின் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் பான்-இந்திய நடிகராகவும் உயர்ந்து உள்ளார். 

ஜோஜு ஜார்ஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், ஏடி ஸ்டுடியோஸ் மற்றும் கோகுலம் மூவீஸ் ஆகியவற்றின் கீழ் எம் ரியாஸ் ஆடம் மற்றும் சிஜோ வட்கான் இந்த படத்தை தயாரிக்கின்றனர். விஷ்ணு விஜய் மற்றும் சாம் சிஎஸ் இசையமைக்க படத்தை டிரீம் பிக் பிலிம்ஸ் விநியோகம் செய்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.