நட்பில் விழந்த கீறல் இறுதிச்சடங்கில் அண்ணனாய் நின்ற நட்பு..வீடு தேடி வந்த கே சீல் வைத்த கடிதம்!-ஜான் மகேந்திரன் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நட்பில் விழந்த கீறல் இறுதிச்சடங்கில் அண்ணனாய் நின்ற நட்பு..வீடு தேடி வந்த கே சீல் வைத்த கடிதம்!-ஜான் மகேந்திரன் பேட்டி!

நட்பில் விழந்த கீறல் இறுதிச்சடங்கில் அண்ணனாய் நின்ற நட்பு..வீடு தேடி வந்த கே சீல் வைத்த கடிதம்!-ஜான் மகேந்திரன் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 11, 2025 10:42 AM IST

‘முள்ளும் மலரும்' படம் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டது. படத்தைப் பார்த்த தயாரிப்பாளருக்கு படம் பிடிக்கவில்லை; என்ன படம் எடுத்திருக்கிறாய்.. ஊமை படம் போல் இருக்கிறது என்று சொல்லி, பயங்கரமாக கோபப்பட்டு விட்டார். - ஜான் மகேந்திரன் பேட்டி!

நட்பில் விழந்த கீறல் இறுதிச்சடங்கில் அண்ணனாய் நின்ற நட்பு..வீடு தேடி வந்த கே சீல் வைத்த கடிதம்!-ஜான் மகேந்திரன் பேட்டி!
நட்பில் விழந்த கீறல் இறுதிச்சடங்கில் அண்ணனாய் நின்ற நட்பு..வீடு தேடி வந்த கே சீல் வைத்த கடிதம்!-ஜான் மகேந்திரன் பேட்டி!

ரஜினி படத்திற்கு உதவிய கமல்

அந்தப்பேட்டியில் அவர் பேசும் போது, ‘எல்லோரையும் விட கமல் சாருக்கு தான் என்னுடைய அப்பா மகேந்திரனுக்கு எவ்வளவு திறமை இருக்கிறது என்பது முதலில் தெரியும். அவர்தான் மகேந்திரன் பெரிய திரைப்பட இயக்குநராக வருவார் என்று கணித்தார்.

‘முள்ளும் மலரும்' படம் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டது. படத்தைப் பார்த்த தயாரிப்பாளருக்கு படம் பிடிக்கவில்லை; என்ன படம் எடுத்திருக்கிறாய்.. ஊமை படம் போல் இருக்கிறது என்று சொல்லி, பயங்கரமாக கோபப்பட்டு விட்டார்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் சரி செய்யப்பட வேண்டிய காட்சிகளுக்கும், கிளைமாக்ஸ் மற்றும் ‘செந்தாழம் பூவில்’ பாடலில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளுக்கும் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் அப்பா, கமல் சாரிடம் சென்று சூழ்நிலையை விளக்கி, பயங்கரமாக புலம்பி இருக்கிறார்.

இதைக் கேட்ட கமல்ஹாசன் மீதமுள்ள காட்சிகளை எடுக்க உங்களுக்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என்று கேட்க, ஒரு நாள் இருந்தால் போதும், இதர காட்சிகள் அனைத்தையும் எடுத்து விடுவேன் என்று அப்பா கூறியிருக்கிறார். இந்த நிலையில் அதற்கான முழு செலவையும் தானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி, அதற்கான ஏற்பாடுகளை செய்து, படப்பிடிப்பு நாள் முழுவதும் அப்பா கூடவே இருந்து, நீங்கள் நினைத்தது அனைத்தையும் எடுத்து விட்டீர்களா என்று கேட்ட பின்னர்தான் அங்கிருந்து கிளம்பி இருக்கிறார் கமல்ஹாசன்

நன்றியை மறக்காத மகேந்திரன்

அந்த நன்றியை அப்பா எப்போதும் மறக்கவே இல்லை; எல்லா மேடைகளிலும் கமல்ஹாசன் இல்லை என்றால், இன்று இந்த மகேந்திரன் இல்லை என்று பெருமிதமாக கூறுவார். முள்ளும் மலரும் திரைப்படத்தின் பொழுது, ரஜினியும் கமலும் அவ்வளவு பெரிய போட்டியாளர்களாக திரைத்துறையில் வலம் வந்து கொண்டிருந்தார்கள் இருந்த போதும் சினிமாவின் மீது கொண்ட காதலால் கமல் உதவி செய்தார்.

அதன் பின்னர் கமலும் அப்பாவும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். கமல்ஹாசன் நடித்த மீண்டும் கோகிலா திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பும் அப்பாவுக்கு கிடைத்தது. ஆனால் இதற்கிடையில் கமல்ஹாசனுக்கும் அப்பாவிற்கும் நட்பில் ஒரு சின்ன விரிசல் விழுந்தது. அந்த விரிசல் விழுந்த பின்னர், அப்பாவிற்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலுடன் இணைந்து வேலை பார்க்க முடியாது என்பது தெரிந்து விட்டது.

கமலுக்கும் அது சௌகரியமாக இருக்காது என்பதும் அவருக்கு புரிந்தது. இதை காரணமாக வைத்து தான் அப்பா அந்த படத்தில் இருந்து வெளியே வந்து, படத்தை வேறு யாரையாவது வைத்து இயக்கிக் கொள்ளட்டும் என்று எழுதியும் கொடுத்துவிட்டார்.

ஒரு நாள் கமல்ஹாசனின் அப்பா இறந்துவிட்டார். என்னுடைய அப்பா எந்தவிதமான மனதஸ்தாபத்தையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் கமல்ஹாசனின் அருகிலேயே நின்று கொண்டிருந்தார். இறுதிச் சடங்கு முடியும் வரை அப்பா அங்கேயே இருந்து முடித்து விட்டு கமலிடம் சொல்லாமலேயே வீட்டிற்கு வந்து விட்டார். அப்பொழுது கமல்ஹாசன் கடிதம் எழுதி அதில் கே என்ற சீல் வைத்து, அதில் தான் சொல்ல வேண்டிய விஷயத்தை எழுதி அனுப்புவார்; அதேபோன்று ஒரு கடிதம் அப்பாவிற்கும் வந்தது. அந்தக் கடிதத்தில் நீங்கள் அப்பா இறந்த பொழுது எதுவும் செய்யவில்லை என்றாலும், என் உடனேயே ஒரு அண்ணனாக நின்றது எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என்று கமல் குறிப்பிட்டிருந்தார்.’ இவ்வாறு அதில் அவர் பேசினார்.