முள்ளும் மலரும் ஏன் அண்ணந் தங்கை பாசம் பற்றி பேசும் படம் கிடையாது தெரியுமா? மகேந்திரன் மகன் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  முள்ளும் மலரும் ஏன் அண்ணந் தங்கை பாசம் பற்றி பேசும் படம் கிடையாது தெரியுமா? மகேந்திரன் மகன் பேட்டி!

முள்ளும் மலரும் ஏன் அண்ணந் தங்கை பாசம் பற்றி பேசும் படம் கிடையாது தெரியுமா? மகேந்திரன் மகன் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 03, 2025 06:31 AM IST

இத்தனை பேர் சொல்லியும் அண்ணன்தான் வேண்டும் என்று என்னிடம் தங்கை ஓடி வந்து அனுமதி கேட்கிறாள் அல்லவா.. அந்த திமிரில் இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக் கொள்கிறேன் என்று காளி கூறுவான்.

முள்ளும் மலரும் ஏன் அண்ணந் தங்கை பாசம் பற்றி பேசும் படம் கிடையாது தெரியுமா? மகேந்திரன் மகன் பேட்டி!
முள்ளும் மலரும் ஏன் அண்ணந் தங்கை பாசம் பற்றி பேசும் படம் கிடையாது தெரியுமா? மகேந்திரன் மகன் பேட்டி!

என்ன சொல்கிறார் மகேந்திரன்?

இது குறித்து அவர் பேசும் போது, ‘முள்ளும் மலரும் படத்தை பார்க்கும் நபர்கள் அண்ணன் தங்கை பாசம் என்றால், முள்ளும் மலரும் திரைப்படம்தான் என்பார்கள்.

குறிப்பாக அண்ணனுக்கு தங்கை மருதாணி போட்டு விடுகிற சீனாகட்டும், சண்டையில் ரஜினி சாப்பாட்டை வேண்டாம் என்று சொல்லும் சீனாகட்டும்.. இப்படி படத்தில் இடம்பெற்ற பல சீன்களை பல பெரிய திரைப்பட இயக்குநர்களே சிலாகித்து இன்றும் பேசியிருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் எல்லாம் பேசாத ஒரு கோணத்தில் முள்ளும் மலரும் திரைப்படத்தைப் பற்றி அப்பா என்னிடம் பேசியிருக்கிறார். அதைப்பற்றி அவர் பேசும் பொழுது எனக்கு மிக மிக ஆச்சரியமாக இருந்தது. இது எனக்கு எப்போது தெரிந்தது என்றால், ஒரு டிவி சேனலில் இருந்து அண்ணன், தங்கை பாசத்தில் சிறந்த திரைப்படம் பாசமலரா, முள்ளும் மலருமா என்று விவாத நிகழ்ச்சி நடத்த இருந்தார்கள். அதற்கு அப்பாவை தலைமை தாங்க அழைத்திருந்தார்கள்.

காளியின் அகம்பாவம்

அதற்கு அப்பா முதலில் தலைப்பே தவறாக இருக்கிறது. இத்தனை வருடங்கள் கழித்து இன்னும் நிறைய படங்கள் எடுத்திருக்க வேண்டுமோ என்று என்னை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குகிறீர்கள். முள்ளும் மலரும் திரைப்படம் அண்ணன் தங்கை பாசத்தை பேசும் திரைப்படம் கிடையாது. அந்த திரைப்படம் தான் பெரிய ஆள் என்ற அகம்பாவம் பிடித்த காளி என்ற கதாபாத்திரத்தின் கதை என்றார்.

அதற்கு உதாரணங்களாக பல சீன்கள் படத்தில் இருக்கிறது. படத்தில் தங்கை வள்ளிக்கு காளி சாப்பாடு போடவில்லை என்று ஒருவன் சொன்னதற்காக அவனை அடித்து, மிதித்து அப்படி ஒரு நாள் வந்தால் அது காளி இறந்த நாளாக இருக்கும் என்று பேசும்.

அதேபோல இரண்டு கை இரண்டு கால் இல்லை என்றாலும் கூட இந்த காளி பிழைத்துக் கொள்வான் என்பதிலும் அவனின் அகம்பாவம் வெளிப்படும். படத்தின் இறுதி காட்சியில் ஷோபா அண்ணனிடம் வந்து நிற்கும் பொழுது, இப்போது உங்களது முகத்தை வைத்துக் கொண்டு எங்கே செல்வீர்கள்.. இத்தனை பேர் சொல்லியும் அண்ணன்தான் வேண்டும் என்று என்னிடம் தங்கை ஓடி வந்து அனுமதி கேட்கிறாள் அல்லவா.. அந்த திமிரில் இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக் கொள்கிறேன் என்று காளி கூறுவான்.

அப்படி ஒரு வேளை அவன் தங்கை மீது பாசம் வைத்திருந்தால் வெண்ணிறாடை மூர்த்திக்கு எப்படி தன்னுடைய தங்கையை மணம் முடிக்க கேட்பார். ஆகையால் அப்பா மகேந்திரன் பார்வையில் இப்படம் அண்ணன் தங்கை பாசம் பற்றி பேசும் படம் கிடையாது. ஆனால், மக்கள் படத்தை வேறு விதமாக எடுத்துக்கொண்டார்கள்’என்று பேசினார்.