தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Malavika Manoj Rioraj: ‘உருகி உருகி போனதடி’ - மீண்டும் இணையும் ‘ஜோ' ஜோடி! - டைரக்டர் யாரு தெரியுமா?

Malavika Manoj Rioraj: ‘உருகி உருகி போனதடி’ - மீண்டும் இணையும் ‘ஜோ' ஜோடி! - டைரக்டர் யாரு தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
May 04, 2024 12:14 PM IST

நீண்ட நாட்களாக சினிமாவில் ஒரு வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த ரியோவிற்கும் ஜோ திரைப்படம் திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இந்தக்கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது

ரியோ ராஜ், மாளவிகா!
ரியோ ராஜ், மாளவிகா!

ட்ரெண்டிங் செய்திகள்

நீண்ட நாட்களாக சினிமாவில் ஒரு வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த ரியோவிற்கும் ஜோ திரைப்படம் திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இந்தக்கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. 

இவர்கள் இணையும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. இயக்குநர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, ஜனரஞ்சகமான வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த “ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்” நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் இந்தப்படம் தயாரிக்கப்பட இருக்கிறது. புதுமுக இயக்குநர் “பிளாக்‌ஷிப்” கலையரசன் தங்கவேல் இத்திரைப்படத்தை இயக்குகிறார். 

பிளாக்‌ஷிப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம் கமிட் செய்யப்பட்டு இருக்கிறார். இசையமைப்பாளராக சித்துகுமாரும், தொகுப்பாளராக வருண் கே.ஜியும், கலை இயக்குநராக வினோத் ராஜ்குமாரும், ஆடை வடிவமைப்பாளராக மீனாட்சியும் கமிட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர், ஆகியோரும் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள். இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடித்து, இந்த வருட பிற்பகுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் .

இந்தப்படம் குறித்து பேசிய இயக்குநர் கலையரசன் தங்கவேல். “திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை, பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லப்போகும் முதல் திரைப்படமாக நிச்சயம் இந்தப்படம் இருக்கும் “ என்று கூறினார். இந்தப் படத்திற்கான மக்கள் தொடர்புப் பணிகளை சதீஷ் குமார் மேற்கொள்கிறார்.

முன்னதாக, சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் நடிகர் ரியோ ராஜ். அதன் பின்னர் சரவணன் மீனாட்சி, ஜோடி நம்பர் ஒன் 9, ரெடி ஸ்டெடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்.

இதனிடையே சினிமாவிலும் கால் பதித்த ரியோ சத்ரியன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

அதனைத்தொடர்ந்து ஜோ படம் வெளியானது. அந்தப்படம் தொடர்பாக, கலாட்டா யூடியூப் சேனலுக்கு ரியோ ராஜூம், அவரது காதல் மனைவியுமான ஷ்ருதியும் பேட்டி கொடுத்தனர்.

அவர்கள் பேசும் போது, “சண்டை போடாமல் இருந்ததில்லை என்று சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால், முன்பை விட இப்போதுதான் நிறைய சண்டை போடுகிறோம்.

சண்டை போட்டால் கூட, எங்களால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருக்க முடியாது. காரணம், எங்களுக்கு அது மிகவும் கஷ்டமாக இருக்கும். எவ்வளவு டைம் எடுத்தாலும், அதனை பேசி பேசியாவது தீர்த்து விடுவோம்.

எங்களுக்குள் தனி தனி ஸ்பேஸ் என்ற ஒன்று இருந்ததில்லை. என்னுடைய வாழ்க்கையில், நான் நல்ல மனிதனாக மாறுவதற்கு காரணம், ஷ்ருதிதான். நான் இருக்கும் துறையாலும், நண்பர்களாலும், சுற்றி இருப்பவர்களாலும் நாங்கள் தினமும் நிறைய பிரச்சினைகளை சந்திப்போம். அப்போதெல்லாம், எனக்கு வீட்டிற்கு சென்று இவளிடம் புலம்ப வேண்டும் என்று தோன்றும்.

எவ்வளதான் சண்டை இருந்தாலும், தினமும் தூங்க செல்வதற்கு முன்னதாக கட்டிபிடித்து, ஐ லவ் யூ என்று சொல்லிக்கொள்வோம். அது எங்களை பார்த்துக்கொள்ளும்.

இவள் என்னிடம் பலமுறை, நான் உன்னுடைய வாழ்க்கையில் வரவில்லை என்றால், நீ நன்றாக இருந்திருப்பாய் என்று கேட்பாள், அந்த கேள்வி எனக்கு பிடிக்காது. நான் பலமுறை நீ வந்ததினால்தான் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். ரியோவை திருமணம் செய்யும் பலரும் இவன் நிரந்தரமில்லாத துறையில் இருப்பதாக பேசினர். ஆனால், எனக்கு இவன் நம்பிக்கை இருந்தது!” என்று பேசினர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்