JioHotstar: இன்றைய ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தின் டாப் பட்டியல் திரைப்படங்கள் எவை தெரியுமா?
வாரவிடுமுறை நாட்களை மேலும் சுவையானதாகவும், ரசணையானதாகவும் மாற்ற, ஜியோ ஹாட்ஸ்டார் பரிந்துரைத்துள்ள இந்த திரைப்படங்களை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். இது உங்களின் விருப்பத்திற்கு உட்பட்டதாகும்.

ஓடிடி தளங்களில், வாடிக்கையாளர்களை கவர தினமும் டாப் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வார விடுமுறையின் தொடக்க நாளான இன்று, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் டாப் சினிமா மற்றும் தொடர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆச்சரியமான விசயம், லப்பர் பந்து திரைப்படம் முதலில் இருப்பது தான். ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போட்ட அத்திரைப்படம், அதன் பிறகு ஓடிடி.,யிலும் மெகா ஹிட் அடித்தது.
அதன் பின், நிறைய படங்கள் ரிலீஸ் ஆனாலும், மீண்டும் மீண்டும் லப்பர் பந்து களத்திற்கு வருவது, அந்த திரைப்படத்தின் தாக்கத்தை உணர முடிகிறது. இதோ இன்று ஜியோ ஹாட் ஸ்டார் வரிசைப்படுத்தியுள்ள டாப் திரைப்படங்களில் முதல் 5 இடத்தை பிடித்துள்ள திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் வரிசையை காணலாம்.
1.லப்பர் பந்து
லப்பர் பந்து திரைப்படம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இப்படத்தில், ஹரிஷ் கல்யாண், தினேஷ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஸ்வாசிகா விஜய், காளி வெங்கட் மற்றும் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
2. ஓப்பன்ஹைமர் (Oppenheimer)
பிரபல கிறிஸ்டோபர் நோலன் திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்து வெளியான திரைப்படம். 2023ல் வெளியான இத்திரைப்படம், ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டாலும், தமிழிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஓப்பன்கைமரின் பணியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
3.சுக்ஷ்மதர்ஷினி (Sookshmadarshini)
2024 ஆம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி மலையாளத்தில் வெளியான மர்ம த்ரில்லர் திரைப்படம். எம்.சி. ஜிதின் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், நஸ்ரியா நசீம் உள்ளிட்ட முக்கிய மலையாள கதாபாத்திரங்கள் நடத்துள்ளனர். விறுவிறுப்பான த்ரில்லர் அனுபவத்தை இந்த திரைப்படம் தருகிறது. தமிழில் இத்திரைப்படத்தை காணலாம்.
4.கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones)
ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டினின் ‘எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்’ என்ற புத்தகத் தொடரின் தழுவலாக கூறப்படும் இந்த வெப்சீரிஸ், 2019 ம் ஆண்டு வெளியானது. தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த சீரிஸை, டேவிட் பெனிஆஃப் மற்றும் டி.பி. வெய்ஸ் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். பேண்டஸி ஜானரில் 8 சீசன்களாக, இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் உள்ளது.
5.தாசா கபர் (Taaza Khabar)
இரண்டு சீசன்களாக ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த வெப்சீரிஸ், ஒரு இளைஞன் பெறும் அபரிவிதமான சக்தியை மையமாக கொண்டத் தொடராகும். தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் இந்த தொடர் பயன்பாட்டில் உள்ளது. இந்த தொடருக்கு, 5வது இடத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஒதுக்கியுள்ளது.
வாரவிடுமுறை நாட்களை மேலும் சுவையானதாகவும், ரசணையானதாகவும் மாற்ற, ஜியோ ஹாட்ஸ்டார் பரிந்துரைத்துள்ள இந்த திரைப்படங்களை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். இது உங்களின் விருப்பத்திற்கு உட்பட்டதாகும்.

டாபிக்ஸ்