காத்திருப்பு முடிவடைந்தது.. 2வது சீசனுக்கான ஸ்ட்ரீமிங் தேதியை அறிவித்தது ஹார்ட் பீட் வெப் சீரிஸ்.. குஷியில் ரசிகர்கள்!
தமிழில் வெளியான பிரபலமான ஹார்ட் பீட் வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் ஸ்ட்ரீமிங் தேதியை அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம். அதுகுறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான தமிழ் வெப் சீரிஸ் 'ஹார்ட் பீட்'. இந்த வெப் சீரிஸ் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மருத்துவ நகைச்சுவை நாடகத் தொடரான இதில் தீபா பாலு மற்றும் அனுமோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தற்போது இந்த தொடரின் இரண்டாவது சீசன் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹார்ட் பீட் சீசன் 2 தொடரின் ஸ்ட்ரீமிங் தொடக்க தேதி தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ட்ரீமிங் எப்போது?
ஹார்ட்பீட் சீசன் 2 வெப் சீரிஸ் ஸ்ட்ரீமிங் மே 22 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தொடங்கும், அன்று முதல், தொடரின் அத்தியாயங்கள் படிப்படியாக வெளியாகும். இதுகுறித்த அறிவிப்பில், "துடிப்புக்கான காத்திருப்பு முடிந்துவிட்டது. மே 22 ஆம் தேதியை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஹார்ட்பீட் சீசன் 2 மே 22 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கும்" என்று ஜியோ ஹாட்ஸ்டார் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.