Jigarthada Double x: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்த்து முக்கிய நடிகர் சொன்ன முதல் விமர்சனம் - உறைந்துபோன படக்குழு!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்த்துவிட்டு ஒருமுக்கிய நடிகர் சொன்ன விமர்சனத்தால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தீபாவளியை ஒட்டி வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் தனது முதல் ரிவியூவைப் பதிவுசெய்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இன்று(நவம்பர் 10) ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான மாமதுர பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.
இந்நிலையில் இப்படத்தை ரிலீஸுக்கு ஒரு நாள் முன்பே தனுஷுக்கு, கார்த்திக் சுப்புராஜ் போட்டு காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படம் பார்த்து இம்ப்ரெஸ் ஆன நடிகர் தனுஷ், அதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளார்.
அவர் செய்த பதிவில், ‘ ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து அருமையான படைப்பாக வெளிவந்திருக்கிறது. ஆச்சரியப்படுத்தும் தனது பாணியிலான நடிப்பை எஸ்.ஜே.சூர்யா வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நல்ல ஃபெர்மாராக ராகவா லாரன்ஸ் வெளிப்பட்டுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், உங்களது பணி அழகுங்க. இப்படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்கள் மனதை கொள்ளையடிக்கும். படக்குழுவினருக்கும் படத்தில் நடித்தவருக்கும் எனது வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டுப் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக, நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார். அப்படம் ஆவரேஜான வெற்றியைப் பெற்றிருந்தது. மேலும், கார்த்திக் சுப்புராஜ், நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கெடுத்து, அதன்பின், பீட்ஸா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான் ஆகியப் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்