ஓரங்கட்டப்பட்ட பிரதர்! 4 ஆவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? ரசிகர்களை கவரவில்லையா?
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, நட்டி நடராஜன், பிரியங்கா மோகன் மற்றும் பூமிகா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் பிரதர், இப்படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியானது.
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, நட்டி நடராஜன், பிரியங்கா மோகன் மற்றும் பூமிகா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் பிரதர், இப்படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. அக்கா தம்பிக்கு இடையேயான பாச உணர்வை அடிப்படையாக கொண்டு இப்படம் வெளியானது.
ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகையின் போது புது படங்கள் வெளியாகி ரசிகர்களை கவருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் இந்த வருட தீபாவளிக்கு மொத்தம் மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. தெலுங்கில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படமும் டப்பிங் செய்து வெளியானது. இதில் முன்னணி நடிகர்களான ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் மற்றும் கவின் உட்பட கதாநாயகர்களாக இருந்தனர். ஒரே சமயத்தில் இவர்கள் நால்வரின் படங்கள் வெளியானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த நான்கு படத்தில் மக்களின் மனதை வென்று நீண்ட நாட்கள் ஓட போகும் படம் எது என்ற கேள்வியும் எழுந்திருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக ஓடிய படங்களின் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.
பிரதர் படத்தின் வரவேற்பு
இந்த நான்கு படங்களில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பிளடி பெக்கர் கலையான விமர்சனங்களோடு காமெடி கதைகளும் இருந்ததனால் மட்டும் சில தியேட்டர்களில் இன்றும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இருப்பினும் படம் மிகவும் மோசமாக இருக்கும் என விமர்சனம் பெற்ற பிரதர் படம் வசூல் சற்று சரியத் தொடங்கியுள்ளது. நான்காவது நாளான நேற்று தியேட்டர்களுக்கு வரும் மக்களின் வரவு குறைந்துள்ளது.
படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்வதாகவும், அதிக போர் அடிக்கும் வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இரண்டாம் பாகம் ஓரளவிற்கு அதனை சமன் செய்யும் அளவிலும் இருப்பதினால் ரசிகர்கள் இன்றும் படத்திற்கு வந்துள்ளனர். மேலும் படத்தில் பல சீனியர் நடிகர்கள், திறமையான நடிகர்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை என இயக்குனர் ராஜேஷை விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ராஜேஷின் பழைய படங்களான சிவா மனசுல சக்தி பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களில் இருக்கும் எதார்த்த வசனங்களோ காமெடிகளோ இந்த படத்தில் மிஸ்ஸிங் ஆனது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது.
வசூல்
முதல் நாளில் ரூ. 2.5 கோடியும், இரண்டாம் நாளில் ரூ. 2.2 கோடியும் வசூல் ஆகியிருந்தது. மூன்றாம் நாளான சனிக் கிழமை முற்றிலும் சரிந்து ரூ. 1.9 கோடியும் வசூல் ஆனது. நான்காவது நாளான நேற்று ஓட்டுமொத்தமாகவே வெறும் ரூ.ஒரு கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது. இன்னும் படத்தின் அதிகாரப்பூர்வமான வசூல் குறித்து படக்குழு எதுவும் தெரிவிக்கவில்லை. வார இறுதி நாளிலேயே படத்தின் வசூல் இந்த அளவிற்கு குறைந்துள்ளதால், படக்குழு வருத்தத்தில் உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்