விடாமுயற்சி அவுட்.. பொங்கல் ரேஸில் வரிசை கட்டும் படங்கள் லிஸ்ட் - கெத்து விடியோவை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விடாமுயற்சி அவுட்.. பொங்கல் ரேஸில் வரிசை கட்டும் படங்கள் லிஸ்ட் - கெத்து விடியோவை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்

விடாமுயற்சி அவுட்.. பொங்கல் ரேஸில் வரிசை கட்டும் படங்கள் லிஸ்ட் - கெத்து விடியோவை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 02, 2025 12:14 PM IST

பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி படம் விலகியதால் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை பொங்கல் ரிலீஸாக இணைந்துள்ளது. இதுதவிர மேலும் சில படங்கள் பொங்கல் விடுமுறையாக குறிவைத்து களமிறக்கப்பட உள்ளன.

விடாமுயற்சி அவுட்.. பொங்கல் ரேஸில் வரிசை கட்டும் படங்கள் லிஸ்ட்
விடாமுயற்சி அவுட்.. பொங்கல் ரேஸில் வரிசை கட்டும் படங்கள் லிஸ்ட்

விலகிய விடாமுயற்சி

அஜித்குமார் நடிப்பில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உருவாகி வரும் விடாமுயற்சி படம் பொங்கல் வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவில் படத்தின் ரிலீஸ் தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டது. படத்தயாரிப்பாளர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்களை ஷாக் ஆக்கியது. அத்துடன் விடாமுயற்சி தள்ளிப்போனதற்கு பலரும் அஜித்தையும், படக்குழுவினரையும் ட்ரோல் செய்ய தொடங்கினர்.

வரிசை கட்டிய படங்கள்

விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகாது என அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் விடுமுறையை குறிவைத்து அடுத்தடுத்து புதிய படங்கள் களமிறங்குகின்றன. இதில் பெரிய ஹீரோக்கள் படங்கள் இல்லை என்றாலும், ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை, இயக்குநர் பாலாவின் வணங்கான் படமும் அடங்கியுள்ளது.

பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி விலகல் அறிவிப்புக்கு பின்னர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் ஜெயம் ரவி - நித்யா மேனன் நடித்திருக்கும் ரொமாண்டிக் படமான காதலிக்க நேரமில்லை ஜனவரி 14 வெளியாகும் என அறிவக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பாலா இயக்கத்தில் உருவாகி அருண் விஜய் நடித்து பல முறை தள்ளிப்போன வணங்கான் படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் உலா வருகின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.

இந்த படம் தவிர சிபிராஜ் நடித்திருக்கும் டென் ஹவர், மறைந்த கேப்டன் விஜயகாந்த் இளையமகன் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் படைத்தலவன், மிர்ச்சி சிவா நடித்திருக்கும் சுமோ, தருணம், மெட்ராஸ்காரன் உள்ளிட்ட படங்கள் பொங்கல் ரிலீஸாக வெளியாகலாம் என பேசப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

பான் இந்தியா படமாக வெளியாகும் கேம் சேஞ்சர்

இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக தெலுங்கில் இயக்கியிருக்கும் கேம் சேஞ்சர் படம் வெளியாகவுள்ளது. தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடித்திருக்கும் இந்த படம் தமிழ், இந்தி உள்பட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகிறது. படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் விரைவில் பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது.

தற்போதைய நிலையில் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை படம் மட்டும் தமிழில் பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது. அதேபோல் கேம் சேஞ்சர் படம் பான் இந்தியா ரிலீஸ் ஆக வர இருக்கிறது.

ட்ரெண்ட் செய்யும் அஜித் ரசிகர்கள்

விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸில் இருந்து விலகியதை அடுத்து பலரும் ட்ரோல் செய்த நிலையில், அஜித் ரசிகர்கள் இந்த படம் விலகியதால் பல படங்களில் ரிலீசுக்கு போட்டி போடுவதாக கூறி பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

லப்பர் பந்து படத்தில் தனது விக்கெட்டை வீழ்த்தி எதிரணி கொண்டாடுவதை பார்த்து கெத்தாக ரசித்து வருவார் அட்டகத்தி தினேஷ். அப்போது பின்னணியில் கேப்டன் விஜயகாந்தின் நீ பொட்டு வைத்து தங்க குடம் பாடல் ஒலிக்கும். இந்த விடியோ க்ளிப்பிங்கை பகிர்ந்து அஜித்தின் விடா முயற்சி அவுட் பல படங்களுக்கு வழிவிடுவதாக கூற ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.