'பிறவி குணத்த மாத்தவே முடியாது.. நீங்க நிறைய விட்டுக் கொடுத்துட்டீங்க' மாஸ் காட்டிய ஜெஃப்ரி அம்மா
ஒருவரிடம் இருக்கும் பிறவி குணத்தை எந்த டாஸ்கிற்காகவும் மாற்ற முடியாது என பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஜெஃப்ரியின் அம்மா கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். போட்டியாளர்கள் எப்படி கேம் விளையாட வேண்டும். என்ன தவறு செய்தார்கள், எதை சரியாக செய்தார்கள் என்பது பற்றி எல்லாம் பேசி வந்தனர்.
பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஜெஃப்ரி குடும்பம்
அந்த வகையில் தற்போது ஜெஃப்ரியின் அம்மாவும் அப்பாவும் பிக்பாஸ் வீட்டிற்குள் காலை வேக்அப் பாடல் ஒலிக்கும்போதே வந்தனர். அவர்கள், இதுவரை பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க் பற்றியும் ஜெஃப்ரி அதில் எப்படி விளையாடினான், ஜெஃப்ரியை மற்றவர்கள் எப்படி பார்த்தார்கள் என்பது பற்றி கூறினர். பின் ஜெஃப்ரியுடன் சேர்ந்து தங்கமே தங்கமே பாடலை பாடினார். பின், அவரது கணவருக்காக வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களோடு சேர்ந்து உனக்காக பிறந்தேனே எனதழகா பாடலை பாடினார்.
இங்க நிறைய தலைவலி. அதுக்காகவே நிறைய யோசிச்சு யோசிச்சு நிறைய மாத்திரை போடுறேன்னு ஜெஃப்ரி கூறினார். எனக்கு நீ ஒரு குட் மார்னிங் கூட சொல்ல மாட்டிங்குற. உங்க அப்பா நீ இல்லாம ஜாலியா இருக்காரு என அவரது அம்மா கேட்டார்.
எங்களால அழுகைய நிறுத்த முடியல
ஜெஃப்ரி பயங்கரமா புட்பால் விளையாடுவான், இங்க தோப்புக்கரணம் போட்டு கால் வலிக்குதுன்னு அழும் போது, இனிமே அவனால கேம் விளையாட முடியாதோ, அந்த கால் போச்சோன்னு எல்லாம் நெனச்சி அழுதோம். முதல் முற கூட பரவாயில்ல தெரியாம அந்த டாஸ்க் குடுத்துட்டாங்கன்னு விட்றலாம். ஆனா தர்ஷிகா ரெண்டாவது முறையும் அதையே பண்ண சொ்லும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்புறம் டாஸ்க் முடிஞ்சதும் சாரி கேட்டப்போ கொஞ்சம் மனசு லேசாகிடுச்சி.
சௌந்தர்யா, அருண ரொம்ப பிடிக்கும்
கேம் விளையாடும் போது நான் சௌந்தர்யாவ ரொம்ப எதிர்பாத்தேன். ஆனா அப்படியே உக்காந்துருக்காங்க. சௌந்தர்யாவ எனக்கு ரொம்ப பிடிக்கும். உள்ள ஒன்னு வெளிய ஒன்னு எல்லாம் பேசவே மாட்டாங்க. எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி தான். ஒருவேள மத்தவங்ககிட்ட பேசுனா கூட அதே வார்த்த தான் திரும்ப வரும். வேற எதுவும் மாறாது.
அருணும் அப்படி தான். யாருக்காவது தப்பா எதாவது நடந்தா பொறுத்துக்க முடியல. அப்படியே கொதிச்சு போயிடுறாரு. எல்லாருக்கும் சப்போர்ட் பண்ணி பேசி அவர ஆஃப் ஆக்கிடுறாங்க. அவருக்கு நல்ல மனசு இருக்கு.
பிறவி குணத்த மாத்த முடியாது
ஏஞ்சல் - டெவில் கேம் அப்போ எல்லாம் நாங்க ரொம்ப எதிர்பார்த்தோம். டெவில் பண்ண கொடுமைங்களுக்கு எல்லாம் ஏஞ்சலா இருந்தங்க திரும்ப கொடுப்பாங்கன்னு. ஆனா அவங்க எல்லாம் டெவிலா மாறியும் யாரையும் எதுவும் பண்ணல. நான் அன்ஷிதா வாங்குனது எல்லாம் திருப்பி கொடுப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா அப்போவும் அவங்க ரொம்ப அமைதியா இருந்தாங்க. உங்களால டெவிலா நடக்கவே முடியல. அது எல்லாம் ஒரு பிறவி குணம். யாரையும் காயப்படுத்தாம இருக்குறது. அதையெல்லாம் ஒரு டாஸ்க்குக்காக மாத்த முடியாது. நாம என்னதான் நடிச்சாலும், மத்தவங்கள கொடுமைபடுத்துனாலும் அது கேம். அத தாண்டி வரும் போது ஒரு குணம் இருக்கும். அது எந்த சூழல்லயும் மாறாது.
நிறைய விட்டுக் கொடுத்துட்டீங்க
முத்துக்குமரன் நிறைய டாஸ்க்ல விட்டுக் கொடுத்தாரு. அந்த முயல் பொம்மை எல்லாம் நீங்க கொடுக்காம இருந்திருந்தா ஜெயிச்சிருக்கலாம். அங்க இருந்தே நீங்க விட்டுக் கொடுக்க ஆரம்பிச்சிட்டீங்க என்றார். அதற்கு ஜாக்குலின் நாங்க தான் முதல்ல விட்டுக்கொடுத்தோம். அத சொல்ல சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார்.
நீங்க எல்லாம் ஜெயிச்சு டாப்ல போய் நின்னாலும் நெறைய பேர் உங்க கேம்க்கா திட்டினாலும் எல்லாரும் டாஸ்க் முடிஞ்சதும் பழைய மாதிரி மாறிடுறிங்க. அது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்றார்.
டாபிக்ஸ்