Jayanthi Kannappan: லட்சுமி ரூமுக்கு கூப்பிட்டதாக சொன்ன விவகாரம்;‘அவரே மூன்று பொண்ண கல்யாணம்’ - மோகனுக்குஜெயந்தி பதிலடி!
இன்றும் தனது உடலை அவர் அப்படி பராமரித்துக் கொண்டிருக்கிறார். காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது தொடங்கி இரவு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது வரை அவரது வாழ்க்கையானது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருக்கிறது.
பிரபல நடிகரான மோகன் ஷர்மா அண்மையில் தன்னுடைய முன்னாள் மனைவியும், நடிகையுமான லட்சுமி குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை கூறியிருந்தார். அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு தற்போது ஜெயந்தி கண்ணப்பன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “எல்லாவற்றையும் விடுங்கள். அவரும் ஒரு சக நடிகை தானே. அப்படி இருக்கும் பொழுது அவரைப்பற்றி பொதுவெளியில் இப்படியான ஒரு விஷயத்தை வெளியிடுவது எப்படி நியாயமாகும்.
சினிமாவில் இருக்கக்கூடிய இவரே இப்படி பேசினால், பொது வெளியில் இருக்கக்கூடியவர்கள் எப்படி பேசுவார்கள். லட்சுமி அம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அங்கு கொடுக்கப்படும் உணவை சாப்பிட மாட்டார். வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வரும் உணவைதான் சாப்பிடுவார்.
இன்றும் தனது உடலை அவர் அப்படி பராமரித்துக் கொண்டிருக்கிறார். காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது தொடங்கி இரவு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது வரை அவரது வாழ்க்கையானது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருக்கிறது.
மோகன் சர்மா லட்சுமி அக்காவுடன் வாழ்ந்த காலங்களில் நடந்த பர்சனலான விஷயங்களை, இப்போது வந்து பொதுவெளியில் பேசுவது என்பது நாகரிகமே கிடையாது. இதை நான் மிகவும் கண்டிக்கிறேன். லட்சுமி அம்மாவின் தாயார், இப்படிப்பட்ட ஒரு பெண்மணி இந்த உலகத்தில் பிறக்கவே முடியாது என்று லட்சுமியை பார்த்து சொன்னதாக அவர் சொல்லியிருக்கிறார்
அதற்கு அவரிடம் என்ன ஆதாரம் இருக்கிறது. இவருக்கும் இப்போது நல்ல வயதாகி விட்டது. வயது ஆக ஆக ஒரு மனிதன் நாளடைவில் முதிர்ச்சி தான் அடைய வேண்டும். ஆனால் அவரோ இப்படி பேசி இருக்கிறார். மோகன் சர்மாவும் மூன்று கல்யாணத்தை செய்தவர்தான்.
முதலில் லட்சுமி அக்காவை கல்யாணம் செய்து, அதன் பின்னர் அவரைப் பிரிந்தார். அதனைதொடர்ந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அதன் பின்னர் சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
லட்சுமி அம்மாவும் மோகன் சர்மாவும் ஒன்றாக வாழும் பொழுது லட்சுமி அம்மா 6 லட்சத்தை கொடுத்து, தான் வாங்கிய வீட்டிற்க்கான பத்திரப்பதிவு வேலைகளை முடித்து வருமாறுமோகனை அனுப்பி இருக்கிறார். ஆனால் மோகனோ அந்த வீட்டை தன்னுடைய பெயரில் ரிஜிஸ்டர் செய்து வந்திருக்கிறார். இதை அண்மையில் தான் லட்சுமி அம்மா என்னிடம் பகிர்ந்தார்.” என்று பேசினார்.
மோகன் சர்மா லட்சுமி மீது வைத்த குற்றசாட்டுகள்:
இது குறித்து இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு அவர் பேசும் போது, “மும்பையில் வசித்த நான் ஷூட்டிங் இருக்கும் போது மட்டும் இங்கு வருவேன். இந்த நிலையில் ஒருமுறை லக்ஸ் விளம்பரத்தில் நடிப்பதற்காக மும்பை வந்திருந்த லட்சுமி, என்னை போனில் அழைத்து, எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் செய்ய வேண்டும். உதவ முடியுமா என்று கேட்டார்.
இதனையடுத்து நானும் அவரும் ஷாப்பிங் சென்றோம். ஷாப்பிங்கின் போது நான் சேவிங் செய்த பிறகு பயன்படுத்தக்கூடிய ஒரு சொல்யூஷனை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் விலை அப்போது 500 ரூபாய். நாய் வடிவத்தில் அந்த பாட்டில் இருந்ததே மிகவும் அழகாக இருந்தது. ஆனால் நான் அதனை வாங்கவில்லை.
ஷாப்பிங் முடிந்து ஹோட்டலுக்கு வந்து இறங்கிய போது, நான் ஆசைப்பட்ட அந்த சொல்யூஷனை லட்சுமி என் கையில் கொடுத்து எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தால், இந்த நாய் போல உங்களது வாழ்க்கையில் நான் இருப்பேன் என்று சொன்னார்.
இதைக் கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது. காரணம் நான் அப்படியான ஒரு விஷயத்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. அன்று இரவு தூக்கமே இல்லை. இதனையடுத்து நான் காலையில் அவரை சென்று சந்தித்தேன்
அவர் எனக்காக ஷூட்டிங்கை கேன்சல் செய்து இருந்தார். இருவரும் சாப்பிடச் சென்றோம். அப்போது மிகவும் ஓப்பனாக என்னை கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொன்னார்.
அதன் பின்னர் அவர் ஹோட்டல் ரூமிற்கு அழைத்துச் சென்றார் அங்கு சென்ற பின்னர் என்ன நடக்கப் போகிறது என்பதை என்னால் கணிக்க முடிந்தது. எல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவரிடம் நான் மிகவும் பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன். அதனால் முதலில் குங்குமம் வைத்து விடுகிறேன் என்று சொல்லி குங்குமம் வைத்து விட்டேன். அதன் பின்னர் மற்றவை அரங்கேறியது. அது எங்களுடைய முதல் இரவாகவும் மாறியது. அதன் பின்னர் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
வாழ்க்கை நல்ல படியாக சென்று கொண்டிருந்த நிலையில், லட்சுமி சில பேருடன் தவறான உறவில் ஈடுபட்டார். இதற்கிடையே அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கும்,லட்சுமிக்கும் இடையே முட்டல் மோதல்கள் நடந்தன. ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா கோபத்தில் கொந்தளிக்க, லட்சுமியோ அவருக்கு எதிராக செயல்பட போவதாக சொல்லி ஒரு மகளை தத்தெடுத்துக் கொண்டார்
ஆனால் அது தத்தெடுத்த குழந்தை கிடையாது. லட்சுமி என்னிடம் ருக்மணி அம்மாவை தன்னுடைய அம்மா இல்லை என்று ஒரு முறை சொன்னார். இந்த பிரச்சனைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ருக்மணி அம்மா என்னிடம், கடவுளே நினைத்தாலும் இனி லட்சுமி போல் ஒருவரை அவரால் படைக்க முடியாது என்று வருந்தினார்.
லட்சுமிக்கும், எனக்கும் பிரச்சினைகள் மூண்டது. இருவரும் தனித்தனி பெட்ரூமில் தங்க ஆரம்பித்தோம். நான் ஒருமுறை விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஐஸ்வர்யா என்னிடம் வந்து அம்மா யாரிடமுமோ அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார். அதில் மனமுடைந்த நான் அப்படியே அந்த வீட்டில் வெளியே வந்து விட்டேன்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்