Vishal Health : மோசமான கட்டத்தில் விஷால்.. கூடிய சீக்கிரம் அவன் மீண்டு வருவான் - ஜெயம் ரவி சொன்ன நச் தகவல்!
Vishal Health : காதலிக்க நேரமில்லை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் விஷால் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் ஜெயம் ரவி. அதில் அவர் விஷாலை விட ஒரு தைரியசாலி யாரும் கிடையாது. அவன் இப்போது ஒரு மோசமான கட்டத்தில் இருக்கிறான் என கூறியுள்ளார்.
Vishal Health : தமிழ் சினிமாவில் 6 பேக், 8 பேக் என மாஸாக வலம் வந்தவர் விஷால். 6 அடி உயிரம், கட்டுக்கோப்பான உடல்வாகு இதுதான் இவரது அடையாளமாக இருந்தது. ஆனால், அந்த அடையாளம் சமீப காலங்களில் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது.
அவரது ரத்னம் படம் வெளியான சமயத்திலேயே அவர் உடல்நிலையை பார்த்து பலரும் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்வி 12 ஆண்டுக்கு பின் வெளியாக இருக்கும் மதகஜராஜா படத்தின் நிகழ்ச்சியில் பேசுபொருளானது. நடுங்கும் கைகள், குரல் என்பது மட்டுமின்றி, நிற்கக் கூட முடியாத நிலையிலும் தன் படத்தின் புரொமோஷனுக்கு வந்தார் விஷால். இப்படி இவரை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன ஆனது என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை. இதனால், இப்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறார் விஷால்.
எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை
கடந்த சில ஆண்டுகளாக விஷாலிற்கு எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி சிறிதளவு ஆறுதலை தந்திருந்தாலும் இந்த படம் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்ற வாய்ப்புள்ளது
கடந்த 2013-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. படம் சுந்தர் சி படம் என்பதாலும், படத்தில் விஷால், சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் காரணத்தால் நிச்சயமாக காமெடிக்கு பஞ்சமே இருக்காது என படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்புகள் இருந்தது.
ஆதரவு குவியத் தொடங்கிவிட்டன
சுமார் 12 வருடங்கள் கழித்து இந்த பொங்கலுக்கு தனது ரிலீஸை அறிவித்துள்ளது மதகஜராஜா. பொங்கலுக்கு 11 புதிய படங்கள் வெளியாகும் நிலையில் மதகஜராஜாவுக்கு இப்போதே சமூக வலைதளங்களில் ஆதரவு குவியத் தொடங்கிவிட்டன. அந்த சமயத்தில் சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு உள்ளிட்ட எல்லா படங்களும் நகைச்சுவை சிறப்பாக இருந்தது. எனவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அது மட்டுமின்றி படத்தில் இருந்து வெளியான பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக சிக்கு புக்கு ரயில் வண்டி பாடல் பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இதில் மை டியர் லவ்வரு என்ற பாடலை விஷயலே பாடியுள்ளார்.
காதலிக்க நேரமில்லை
இந்த நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. இந்தப் படத்தில் யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஜன. 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
விஷால் குறித்து ஜெயம் ரவி
இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் விஷால் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் ஜெயம் ரவி. அதில் அவர் கூறியதாவது: 'விஷாலை விட ஒரு தைரியசாலி யாரும் கிடையாது. அவன் இப்போது ஒரு மோசமான கட்டத்தில் இருக்கிறான். ஆனால் அவனுடைய தைரியம் அவனை காப்பாற்றும். கூடிய சீக்கிரம் அவன் வருவான். அவனுடைய நல்ல மனசுக்கும், அவனது குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக அவன் விரைவிலேயே சிங்கம் போல மீண்டு வருவான்' என தெரிவித்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்