Jayam Ravi: விஷால் சிங்கம் மாதிரி வருவான்.. 5 பெண்ணுங்க கூட பெட்டில் இருக்கிற சீன்.. ஓபனாக பேசிய ஜெயம் ரவி
Jayam Ravi: விஷால் சிங்கம் மாதிரி வருவான்.. 5 பெண்ணுங்க கூட பெட்டில் இருக்கிற சீன்.. ஓபனாக பேசிய ஜெயம் ரவி

Jayam Ravi: விஷால் சிங்கம் மாதிரி வருவான்.. 5 பெண்ணுங்க கூட பெட்டில் இருக்கிற சீன் என ஓபனாக பேசிய ஜெயம் ரவி குறித்துப் பார்க்கலாம்.
பிஹைண்ட்வுட்ஸ் யூடியூபில் காதலிக்க நேரமில்லை படம் தொடர்பாக டான்ஸ் மாஸ்டர் கலா, நடிகர் ஜெயம் ரவியிடம் எடுத்த பேட்டி வைரல் ஆகிவருகிறது. அதன் தொகுப்பு இதோ..
காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் கதை எப்படி ஓகே செய்தீர்கள்?
காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் கதை ஒரு 5 வருஷம் முன்பே ஒரு லைனாக சொல்லிட்டாங்க, கிருத்திகா. அப்போ, பெண் இயக்குநர் என்பதால் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தாங்க. நான் ஒன்னே ஒன்னு கேட்டேன். அதிகமாக வேண்டாம். 60 - 40னு இருக்கிறதை, 50 -50னு செய்யுங்க. சரிசமமாக இருந்தால் நான் நடிக்கிறேன் எனச் சொன்னேன். கதைப் பிடிச்சிருக்கு என்று சொன்னேன். அவங்க அதை ஒத்துக்கிட்டாங்க. அதை அவங்க புரிஞ்சுகிட்டு, சில படங்கள் எல்லாம் பண்ணிட்டு, அதற்கப்புறம் வந்தாங்க. படத்தில் ஃபைட் இல்லை. எதுவுமே இல்லை.
