Siren Movie: விசாரணை என்ற பெயரில் கொலை! இரண்டு சைரன்களுக்கு இடையிலான மோதல் - மிரட்டலான சைரன் ட்ரெய்லர்
போலீஸ் அதிகாரியாக வரும் கீர்த்தி சுரேஷ், சைரன் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கவில்லை. ஆனாலும் படத்தில் இவர்களுக்கு இடையிலான கனெக்ஷன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் இடம்பிடித்துள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் சைரன். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரகனி, அழகம் பெருமாள் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.
படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு - செல்வகுமார் எஸ்கே. அந்தோனி பாக்யராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தாடி வைத்து நடுவயது நபராக ஜெயம் ரவி தோன்றியுள்ளார். கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தொடர்ந்து நிகழும் கொலைகளை கண்டறியும் போலீசாக வரும் கீர்த்தி சுரேஷ், கைதியாக இருக்கும் ஜெயம் ரவி ஆகியோருக்கு இடையிலான கேட் அண்ட் ரேட் மோதலாக படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும் என தெரிகிறது.
ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் ஜெயம் ரவி கிரிமினலாக மாறி ஜெயிலுக்கு செல்கிறார். 14 ஆண்டுகளுக்கு பிறகு பரோலில் வெளியே வரும்போது நிகழும் சம்பவங்களே படத்தின் கதை என கூறப்படுகிறது.
இந்த படம் குறித்து பிரபல இணையத்தளமான தி இந்துவுக்கு அளித்த பேட்டியில் படத்தின் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் கூறியதாவது:
"‘சைரன்’ன்னு சொல்லும்போதே அந்த சத்தத்தை நாம உணர முடியும். போலீஸ் வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் என இரண்டுக்கும் இடையில் நடக்கும் மோதல் தான் படத்தின் கதை.
ஜெயம் ரவியை இதுவரை ஜாலியான கேரக்டரில் பார்த்திருப்போம். இந்த படத்தில் நடுத்தர வயதுக்காரராக, சால்ட் அண்ட் பெப்பெர் லுக்கில் தோன்றியிருப்பார். அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ள படமாக இது அமைந்துள்ளது. அதை அவர் சிறப்பாகவும் செய்துள்ளார்.
முதலில் இளமையான தோற்றத்திலும், பின்னர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலும் நடித்தார் ஜெயம் ரவி
அதேபோல் கீர்த்தி சுரேஷும், ஜெயம் ரவி எதிர் எதிர் துருவம் கொண்டவர்களாக இருப்பார்கள். வில்லன்களை மீறி இவங்களுக்குள்ள நடக்கிற மோதல் சீரியஸாக இருக்கும். கீர்த்தி சுரேஷ் இதுவரை நடிச்சதுல இருந்து இதுல வேறுபட்ட நடிப்பை பார்க்கலாம்.
பேமில் சென்டிமென்ட், குடும்பத்தினுள் நடக்கிற சம்பவங்கள் எல்லாமே ரசனையா இருக்கும். அதில் ஒரு மெசேஜ் இருக்கிறது.
இந்த படத்தின் திரைக்கதை நான் லீனியர் பாணியில் முன்னும் பின்னுமாக செல்லும். எனவே கதை சொல்லல் பாணி வித்தியாசமாக இருக்கும். யோகிபாபுவுக்கு படம் முழுவதும் டிராவல் பண்ற கேரக்டர். காமெடி டிராக் அப்படின்னு இல்லாம கதையோட வர்ற மாதிரி இருக்கும். கண்டிப்பாக இந்தப் படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும்"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விஸ்வாசம், இருப்புத்திரை உள்பட சில படங்களுக்கு திரைக்கதை அமைக்கும் பணியில் உதவியாளராக பணியாற்றியுள்ளார் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ். தற்போது சைரன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சைரன் ரிலீஸ் எப்போது?
சைரன் திரைப்படத்தின் டீஸர், சிங்கிள் டிராக் பாடல்கள் ஏற்கனவே ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இந்த படம் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்க்ப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்