Jayam Ravi and Aarti Photo: இந்த புகைப்படத்தை எடுத்தது உங்கள் விஜய்! ரகசியம் பகிர்ந்த ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி
ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியனருக்கு போட்டோகிராபராக மாறிய தளபதி விஜய், அவர்களின் க்யூட்டான ரெமாண்டிக் தருணத்தை புகைப்படமாக எடுத்துள்ளார். இது பற்றிய ரகசியத்தை ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி பகிர்ந்துள்ளார். அத்துடன் ஜெயம் ரவியிடம் பிடித்த விஷயம், பிடிக்காதவை பற்றியும் ரசிகர்களிடம் உரையாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் 2009இல் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்தார். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியனருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
இதையடுத்து ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி இன்ஸ்டா ஸ்டோரியில், கணவர் ரவியுடன் இருக்கும் க்யூட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்த நிலையில், இந்த புகைப்படத்தின் ரகிசியத்தையும் பகிர்ந்துள்ளார்.
விஜய் எடுத்த புகைப்படம்
ஜெயம் ரவி சிரித்தவாறு இருக்க அவரது மடியில், ஆர்த்தி அமர்ந்து தனது வாயை மூடியவாறு வெட்க புன்னகை உதிர்ப்பது போல் இருக்கும் இந்த புகைப்படத்தை தளபதி விஜய் தான் கிளிக் செய்துள்ளாராம். எங்கு, எப்போது என்பதை தெரிவிக்கவில்லை என்றாலும், சரியான ரெமாண்டிக் தருணத்தில் இந்த புகைப்படம் க்ளிக் செய்யப்பட்டிருக்கிறது. அனைவரின் கண்களையும் கவர்ந்த இந்த புகைப்படம் குறித்த இந்த ரகசியம் இது என்ற ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளபக்கத்தில் ரசிகர்களுடனான உரையாடலின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த புகைப்படம் மட்டுமில்லாமல் கணவருடன் இருக்கும் வேறு சில புகைப்படங்களையும் ஆர்த்தி பகிர்ந்துள்ளார்.
ஜெயம் ரவியிடம் பிடித்த, பிடிக்காத விஷயம்
ஜெயம் ரவி தூய்மையான, நேர்மையான இதயம் கொண்டவராக இருக்கிறார். அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் அதுதான். தனது பணிக்காக அன்றாட வாழ்க்கை முறையில் மேற்கொள்ளும் மாற்றம் பிடிக்காத விஷயமாக உள்ளது. அவருக்கு மிகவும் பிடித்தமான உணவு பிரியாணி தான். இதுபோல் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் ஆர்த்தி.
அதேபோல் ரசிகர் ஒருவர் கேட்டுக்கொண்டற்கு இணங்க திருமணத்தின்போது சேலை அணிந்தவாறு இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
ஜெயம் ரவியின் அடுத்த மூன்று படங்கள்
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சைரன் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அனுபமா பரமேஷ்வரன் நடித்திருப்பார். கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அழகம் பெருமாள், யோகி பாபு, சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியிருந்தார். கலவையான விமர்சனங்கள் பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் ஓரளவு வசூலை ஈட்டியது.
இந்த படத்தை தொடர்ந்து எம். ராஜேஷ் இயக்கும் பிரதர் என்ற படத்திலும், பேண்டஸி படமான ஜினி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் காதலிக்க நேரமில்லை படத்திலும் நடித்து வருகிறார்.
பிரதர் திரைப்படம் வழக்கமான ராஜேஷ் படங்களை போல் காமெடி படமாக உருவாகி வருகிறது. காதிலக்க நேரமில்லை காதல் கலந்த காமெடி படமாக தயாராகி வருகிறது.
ஜினி படத்தில் புதுமுக இயக்குநர் புவனேஷ்வர் அர்ஜுனன் இயக்குகிறார். இந்த படத்தில் கிர்த்தி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன், வாமிக கப்பி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்