தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jayam Ravi Divorce : ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து? காரணம் இவர் தான்.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பயில்வான்!

Jayam Ravi Divorce : ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து? காரணம் இவர் தான்.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பயில்வான்!

Divya Sekar HT Tamil
Jun 26, 2024 01:08 PM IST

Jayam Ravi Divorce : ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து விவகாரம் புயலை கிளப்பி உள்ள நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சண்டை ஏற்பட அவரது மாமியார் தான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து? காரணம் இவர் தான்.. அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்ட  பயில்வான்!
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து? காரணம் இவர் தான்.. அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்ட பயில்வான்!

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து?

அந்த வரிசையில் இப்போது புதியதாக விவாகரத்து செய்தி அடிப்பட்டு இருப்பவர்கள் தான் ஜெயம் ரவி - ஆர்த்தி. ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சமீப காலமாக ஒரு செய்தி பரவியது.

ஜெயம் ரவி, ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து செல்வதாகவும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அனுக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ட்ரெண்டிங் செய்திகள்

ஆர்த்தி கொடுத்த பதிலடி

ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் விவகாரத்து செய்ய போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.

இதற்கு ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சமீபத்தில் பதிலளித்தார். ஜெயம் படம் வெளியாகி 21 வருடங்கள் ஆகிறது. இந்தப் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்த ஆர்த்தி, "காதல் என்பது ஒரு வார்த்தை. அது வார்த்தைகள் அல்ல வாழ்க்கை" என்ற தலைப்பைச் சேர்த்துள்ளார். இவர்களது உறவு குறித்த இந்த ஒரு பதிவை வெளியிட்டு விவாகரத்து செய்தியை ஆர்த்தி சரி பார்த்தது போல் இருந்தது.

இதை பார்த்த பிறகு ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை பிரிய மாட்டார். அது வதந்தி தான் என ரசிகர்கள் நம்பி இருந்தார்கள். ஆனால் இல்லை என்பது போல் ஆர்த்தி ஒரு செயல் செய்து இருக்கிறார்.

வதந்தி வந்தது உ ண்மையா?

தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கியிருக்கிறார். இது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் இஸ்டாகிராம் பயோவில் இருக்கும் கணவரின் ஐடியை அவர் நீக்கவில்லை. அதே போல் பெயருக்கு பின்னால் இருக்கும் ரவி என்ற பெயரையும் நீக்கவில்லை.

பயில்வான் ரங்கநாதன் 

இப்படி இவர்களது விவாகரத்து விவகாரம் புயலை கிளப்பி உள்ள நிலையில், அதுகுறித்து மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். இதுகுறித்து அவர் யூடியூப் தளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “ஜெயம் ரவி மாமியார் சுஜாதா.இவர் மிகப்பெரிய பணக்காரர். பீச் பக்கத்தில் உள்ள கல்பனா ஹவுஸ் என்கிற பங்களாவின் ஓனர் சுஜாதா. இவர் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

ஜெயம் ரவி ஆர்த்தியை திருமணம் செய்த பின்னர் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். ஜெயம் ரவி மார்க்கெட் சரியத் தொடங்கிய பின்னர் அவரை வைத்து படம் தயாரிக்க தொடங்கினார் அவரது மாமியார் சுஜாதா. அப்படி அவர் தயாரித்த படம் தான் சைரன். இப்படம் ஓரளவிற்கு ஓடியது. இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தார் சுஜாதா.

இப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி ரூ.20 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். ஆனால் உங்களுக்கு மார்க்கெட் அவ்வளவு இல்லையே என அவரது மாமியார் கூற, ஜெயம் ரவி ரூ.20 கோடி வேண்டும் என விடாப்பிடியாக நின்றார். பின்னர் இயக்குனர் பாண்டிராஜை அழைத்து படத்தின் பட்ஜெட்டை குறைத்துக்கொள்ளுமாறு கூறி இருக்கிறார்.

ஆனால் பாண்டிராஜ் அதற்கு உடல்படவில்லை. பின்னர் வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டு, அந்த கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டார். இது ஜெயம் ரவிக்கு தெரியவர, இதற்கெல்லாம் மாமியார் தான் காரணம் என மனைவி ஆர்த்தி உடன் சண்டை போட்டு இருக்கிறார். அதுதான் பூகம்பமாக வெடித்து தற்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது” என பயில்வான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்