தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Priyamani Interview: வன்மத்தை கக்குனாங்க… அவ்வளவு பொய்கள்.. ‘கைய கெட்டியா பிடிச்சு’ - கணவரை நினைத்து உருகிய பிரியாமணி!

Priyamani Interview: வன்மத்தை கக்குனாங்க… அவ்வளவு பொய்கள்.. ‘கைய கெட்டியா பிடிச்சு’ - கணவரை நினைத்து உருகிய பிரியாமணி!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 15, 2024 06:34 PM IST

கல்யாணத்திற்கு முன்னதாக கணவருடன் பழகிக்கொண்டிருந்த போது, பிரியாமணி குறித்து பல்வேறு வதந்திகள் சோசியல் மீடியாவில் உலாவின.

பிரியாமணி பேட்டி!
பிரியாமணி பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “ உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்த நெகட்டிவான விமர்சனங்கள் என்னை மிகவும் பாதித்தது. என்னை மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்தையும் பாதித்தது. அந்த நேரங்களில் என்னுடைய தாயும், தந்தையும் மிகவும் வருந்தினார்கள். 

ஆனால் என்னுடைய கணவர் ஒரு பாறை போல என் பக்கம் நின்றார். மேலும் அவர்,  “பார்... என்ன நடந்ததாலும் முதலில் நான் அதனை எதிர்கொள்கிறேன். ஆனால் நான் செல்லும் பாதையில், நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும், உன்னுடைய கை என்னுடன் இருக்க வேண்டும்.” என்றார்.

கல்யாணத்திற்கு முன்னதாக கணவருடன் பழகிக்கொண்டிருந்த போது, பிரியாமணி குறித்து பல்வேறு வதந்திகள் சோசியல் மீடியாவில் உலாவின.

அது குறித்து பேசிய அவர், “ அந்த சமயத்தில் நானும் அவர் சொன்னதைதான் அவரிடம் சொன்னேன். எனக்காக நில்லுங்கள்.. என்னை நம்புங்கள் என்றேன். காரணம் மீதமிருக்கும் வாழ்க்கையை நாங்கள் ஒன்றாக இணைந்து வாழ முடிவெடுத்து இருந்தோம். அதில் மழை, புயல், வெயில் என எது வந்தாலும், நாம் ஒன்றாக அந்த பாதையில் நடப்போம் என்று அவரிடம் சொன்னேன். 

அத்தகைய புரிதல் கொண்ட, வலுவான துணை எனக்கு கிடைத்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சியே. எல்லாவற்றையும் சமாளிப்பது எப்படி என்று அவருக்குத் தெரியும்” என்று பேசினார். 

தமிழ், தெலுங்கு மொழி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்காதது ஏன்?

 

அந்த பேட்டியில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்காதது ஏன் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரியாமணி, "நான் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஏன் தேர்வுசெய்யப்படவில்லை என்பதில் எனக்கும் ஆச்சரியம் இருக்கிறது.அதற்கு இப்போது வரை விடை கிடைக்கவில்லை.

இந்த கேள்வி தயாரிப்பாளர்களிடமும், இயக்குநர்களிடமும் கேட்கப்பட வேண்டிய கேள்வி ஆகும். உண்மையாகச் சொல்கிறேன். நான் யாரிடம் குறை கண்டுபிடித்துக்கொண்டிருக்கவில்லை. ஆனால் நான் இதை பல பேரிடம் கேட்டு இருக்கிறேன். நான் அவர்களுடன் சேர்ந்து நடித்தாலோ இல்லை அவர்களது எதிரில் நின்று நடித்தாலோ அவர்களை நான் சாப்பிட்டு விடுவேன் ( நடிப்புத்திறமையால் அவர்கள் வென்று விடுவது) என்று நினைக்கிறார்களாம்.

இதைத்தான் நான் நீண்ட காலமாக கேள்வி பட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதில் உண்மை இல்லை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் உண்மையான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. காரணம் என்னவாக இருந்தாலும் நான் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறேன்.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்