Singapenne Serial: ஆபத்தில் அன்பு அம்மா.. பதறிப்போன ஆனந்தி.. ஓடி வந்த அன்பு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
Singapenne Serial: அன்பு அம்மாவிற்கு அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக ஆனந்தி அன்புவுக்கு தகலல் கொடுத்துள்ளார்.

Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியை காதலிப்பதால் தன் அண்ணன் மகள் துளசியை அன்பு திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறிவிட்டான். இதனால் கோவத்தில் இருந்த அன்பு அம்மா, அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். அவரை சமாதாளம் செய்ய அன்புவும் அவரது தங்கையும் பல முயற்சி எடுத்தும் எல்லாம் வீணாக போனது.
அன்புவை வருத்தப்பட செய்த அம்மா
இந்நிலையில், அன்பு அவரது அம்மா மார்க்கெட் போவதை அறிந்து நானும் உங்களுடன் வரேன் எனக் கூறி உள்ளார். ஆனால், அவரது அம்மாவோ அவரை உதாசினப்படுத்தி பாத்திரங்களை தூக்கி எறிந்து கோவத்தை வெளிப்படுத்தி சென்றார். இதனால் வருத்தத்தில் இருந்த அன்புவிற்கு காத்திருந்தது அதிர்ச்சி.
அன்பு அம்மா மார்க்கெட் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் சைக்கிளில் வந்த ஆனந்தி அவரைப் பார்க்கிறார். அவரைப் பார்த்து பேசலாமா வேண்டாமா என்ற தயக்கத்திலேயே இருந்த ஆனந்தி, ஒரு முடிவெடுத்து அவரிடம் பேச முயன்றார்.
