Karthigai Deepam Serial: விபத்தில் சிக்கிய டாக்டர்.. மாயாவின் திட்டத்தால் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam Serial: மாயாவின் திட்டப்படி, டாக்டர் பந்தக்கால் விழாவிற்கு வரும் வழியில் மயக்கமடைந்து விபக்கில் சிக்கியுள்ளார்.

Karthigai Deepam Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி பந்தக்கால் நடும் நிகழ்ச்சிக்கு டாக்டர் வருவதாக ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மாயா திட்டம்
பந்தக்கால் நிகழ்ச்சிக்கு டாக்டர் வருவதை தடுத்து நிறுத்துவதற்காக மாயா கிளம்பி வருகிறாள். இங்கே டாக்டர் கிளம்பி கொண்டிருக்க மாயா டாக்டர் காரில் குளோரோபார்மை வைத்து விடுகிறாள். இதனால் டாக்டர் வரும் போது மயங்கி விடுவார். அதன்மூலமாக அவரை தடுத்து நிறுத்தி விடலாம் என திட்டம் போடுகிறாள்.
மூடநம்பிக்கை இல்லை
அடுத்து மாயா சாமுண்டீஸ்வரிக்கு வீட்டிற்கு வந்து விட இங்கே டாக்டருக்கு காத்திருந்து பிறகு சரி பந்தக்கால் நட்டுவிடலாம் என முடிவு செய்கிறாள். மாயா ஒதுங்கி நிற்க சாமுண்டேஸ்வரி நீ விதவை என்பதால் ஒதுங்கி எல்லாம் நிற்க வேண்டாம் என்று சொல்கிறாள்.