அச்சச்சோ.. ஆனந்திக்கு வரும் அடுத்த ஆபத்து.. அன்புவுடன் அறுந்து போன உறவு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியை சிலர் கடத்த திட்டமிட்டுள்ளனர். அவரை அன்பு அம்மா காப்பாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
![அச்சச்சோ.. ஆனந்திக்கு வரும் அடுத்த ஆபத்து.. அன்புவுடன் அறுந்து போன உறவு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட் அச்சச்சோ.. ஆனந்திக்கு வரும் அடுத்த ஆபத்து.. அன்புவுடன் அறுந்து போன உறவு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்](https://images.hindustantimes.com/tamil/img/2025/01/08/550x309/singapenne_8_1_1736301649892_1736301677442.png)
சிங்கப்பெண்ணே சீரியலில், தன் காதலை ஆனந்தி ஏற்க மறுத்ததால் மனமுடைந்த மகேஷ், நன்றாக குடித்துவிட்டு ஆனந்தி ஹாஸ்டல் முன் வந்து நின்று கலாட்டா செய்கிறார்.
மகேஷ் செய்த கலாட்டா
மகேஷ், சுயநினைவின்றி இருப்பதைக் கண்ட மித்ராவும் ஆனந்தியும் எவ்வளவோ தடுகக் முயன்றும் மகேஷை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால், ஆனந்தியின் நண்பர்கள் அன்புவிற்கு போன் செய்து ஹாஸ்டலுக்கு வருமாரு கூறினார். ஆனால், அன்பு வருவதற்குள் அங்கு ஒரு கலாட்டாவே நடந்து முடிந்தது.
அன்பு மூலம் செல்லும் தூது
இந்நிலையில், அடுத்த நாள் கார்மெண்ட்ஸ் வந்த ஆனந்தியின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாமல் தவித்த மகேஷ் அன்பு மூலம் ஆனந்தியை சந்திக்க திட்டமிட்டார். ஆனந்தியை யாருக்கும் தெரியாமல் தன்னை சந்திக்க கூட்டிக் கொண்டு வருமாறு மகேஷ் அன்புவிடம் கெஞ்சினார்.
குற்ற உணர்ச்சியில் மகேஷ்
தன் காதலை ஏற்க மறுத்ததை தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தினால் தான் மகேஷ் சார் குடித்து விட்டு அப்படி செய்தார். அவர் ஹாஸ்டலில் வந்து கலாட்டா செய்ததை நினைத்து வருந்துகிறார் என அன்புவும் மகேஷ் சாருக்கு ஆதரவாக ஆனந்தியிடம் பேசுகிறான். இது ஆனந்திக்கு கோவத்தை ஏற்படுத்துகிறது.
ஆனந்தியிடம் மன்றாடும் மகேஷ்
இதற்கிடையில், அன்புவிற்காகவும் இத்தனை நாள் மகேஷ் சார் செய்த உதவிகளுக்காகவும் அவரின் செயல்களை மன்னித்து அவரை சந்திக்க செல்கிறார். அப்போது, என்னை ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும் ஆனந்தியிடம் மன்றாடி கெஞ்சுகிறார்.
அது ஏன் நானா இருக்க கூடாது?
எப்படியும் உன் வாழ்க்கையில் வாழ்க்கைத் துணை என ஒருத்தர் வரத்தான போறாங்க. அது ஏன் நானாக இருக்க கூடாது. ப்ளீஸ் ஆனந்தி. என் காதலை புரிஞ்சுக்கோ என மகேஷ் கெஞ்சினான்.
மகேஷிற்கு வாக்கு கொடுக்கும் வார்டன்
மகேஷின் காதலை ஆனந்தி ஏற்க மறுத்த நிலையில், என்ன செய்வது என தெரியாமல் தவித்த மகேஷ் ஆனந்தியின் ஹாஸ்டல் வார்டனை பார்க்க வந்தார்.
அப்போது, எனக்கு ஆனந்தி வேணும். அதற்காக என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார். அப்போது மகேஷிற்கு சில ஐடியாவை கொடுத்த வார்டன், மகேஷ் காதலை சேர்த்து வைக்க உதவுவதாக கூறியுள்ளார்.
அன்புவுடன் முறிந்த உறவு
இதற்கிடையில், ஆனந்தியை காதலிப்பதால் ,துளசியை கல்யாணம் செய்ய முடியாது என்று கூறிய அன்பு மேல் அவரது அம்மா கோவமாக இருக்கிறார்.
அவரை சமாதானம் செய்ய அன்பு போராடியும் வேலைக்கு ஆகாமல் போனது. இதனால், தங்கையின் ஐடியாவை பயன்படுத்தி அம்மாவிடம் பேச அன்பு முற்பட்ட போது, அன்புவுடனான உறவு முறிந்து போனதாக கோபமாக கூறிவிட்டு சென்றார்.
கடத்தப்படும் ஆனந்தி
இதையடுத்து, சைக்கிளில் வந்து கொண்டிரு்கும் ஆனந்தியை யாரோ சிலர் கடத்த திட்டமிடுகின்றனர். அதை அறியாத ஆனந்தி, அன்பு அம்மாவை பார்த்து பேச தயங்கி நிற்கிறாள்.
இதையடுத்து ஆனந்தி கடத்தப்படுவாளா? அல்லது காப்பாற்றப்படுவாளா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்