அன்பு மூலம் ஆனந்திக்கு போகும் தூது.. மகேஷை கெஞ்ச விடும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அன்பு மூலம் ஆனந்திக்கு போகும் தூது.. மகேஷை கெஞ்ச விடும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

அன்பு மூலம் ஆனந்திக்கு போகும் தூது.. மகேஷை கெஞ்ச விடும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Jan 07, 2025 06:44 AM IST

குடித்துவிட்டு செய்த கலாட்டாவால் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் மகேஷ், அன்பு மூலம் ஆனந்திக்கு தூது அனுப்பி உள்ளார்,

அன்பு மூலம் ஆனந்திக்கு போகும் தூது.. மகேஷை கெஞ்ச விடும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
அன்பு மூலம் ஆனந்திக்கு போகும் தூது.. மகேஷை கெஞ்ச விடும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

மகேஷ் செய்த கலாட்டா

மகேஷ், சுயநினைவின்றி இருப்பதைக் கண்ட மித்ராவும் ஆனந்தியும் எவ்வளவோ தடுகக் முயன்றும் மகேஷை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால், ஆனந்தியின் நண்பர்கள் அன்புவிற்கு போன் செய்து ஹாஸ்டலுக்கு வருமாரு கூறினார். ஆனால், அன்பு வருவதற்குள் அங்கு ஒரு கலாட்டாவே நடந்து முடிந்தது.

கூப்பாடு போட்ட மகேஷ்

மகேஷ், ஆனந்தியைப் பார்த்து நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்ணுனத தவிர வேற என்ன தப்பு பண்ணுனேன்னு கேட்டு கத்தி கூப்பாடு போட்டு மொத்த ஹாஸ்டலையும் வாசலுக்கு கொண்டு வந்துவிட்டார்.

பின், ஹாஸ்டலுக்கு அன்பு வந்ததை பார்த்த மகேஷ், அன்புவிடம், நான் உன்னை நம்புறேன். இங்க இருக்க எல்லாரையும் விட உனஅன நம்புறேன் எனக் கூறி தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். பின் அன்பு, மகேஷ் சாரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

வருந்தும் அன்பு ஆனந்தி

அப்போது, என்னையும் ஆனந்தியும் சேர்த்து வைத்த விதி இப்படி மகேஷ் சாரை கஷ்டப்படுத்துதே என வருந்திய அன்பு அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

அதே சமயத்தில், மகேஷ் சார் நான் அழரை காதலிக்கவில்லை என்று மட்டும், தான் தெரியும். ஆனால், நான் அன்புவைத் தான் காதலிக்கிறேன் என்பது தெரிந்தால் என்ன ஆகுமோ என நினைத்து வருந்துகிறாள்.

அன்பு மூலம் செல்லும் தூது

இந்நிலையில், அடுத்த நாள் கார்மெண்ட்ஸ் வந்த ஆனந்தியின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாமல் தவித்த மகேஷ் அன்பு மூலம் ஆனந்தியை சந்திக்க திட்டமிட்டார். ஆனந்தியை யாருக்கும் தெரியாமல் தன்னை சந்திக்க கூட்டிக் கொண்டு வருமாறு மகேஷ் அன்புவிடம் கெஞ்சினார்.

குற்ற உணர்ச்சியில் மகேஷ்

தன் காதலை ஏற்க மறுத்ததை தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தினால் தான் மகேஷ் சார் குடித்து விட்டு அப்படி செய்தார். அவர் ஹாஸ்டலில் வந்து கலாட்டா செய்ததை நினைத்து வருந்துகிறார் என அன்புவும் மகேஷ் சாருக்கு ஆதரவாக ஆனந்தியிடம் பேசுகிறான். இது ஆனந்திக்கு கோவத்தை ஏற்படுத்துகிறது.

ஆனந்தியிடம் மன்றாடும் மகேஷ்

இதற்கிடையில், அன்புவிற்காகவும் இத்தனை நாள் மகேஷ் சார் செய்த உதவிகளுக்காகவும் அவரின் செயல்களை மன்னித்து அவரை சந்திக்க செல்கிறார். அப்போது, என்னை ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும் ஆனந்தியிடம் மன்றாடி கெஞ்சுகிறார்.

அது ஏன் நானா இருக்க கூடாது?

எப்படியும் உன் வாழ்க்கையில் வாழ்க்கைத் துணை என ஒருத்தர் வரத்தான போறாங்க. அது ஏன் நானாக இருக்க கூடாது. ப்ளீஸ் ஆனந்தி. என் காதலை புரிஞ்சுக்கோ என மகேஷ் கெஞ்சினான். முன்னதாக, குடி போதையில் காரில் வரும் போது, ஆனந்தி அவரின் வாழ்க்கையில் இல்லை என்றால் வாழ்க்கையே ஜீரோ ஆகிவிடும் என்றும் புலம்பினான்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.