'நான் உன்ன மட்டும் தான் நம்புவேன்' போதையிலும் வசனம் பேசிய மகேஷ்.. புலம்பும் அன்பு- சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
ஆனந்தி, அன்புவை காதலிப்பதை அறியாத மகேஷ், தான் அன்புவை மட்டும் தான் நம்புவதாக கூறியதால் அன்பு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்.
தன் காதலை ஆனந்தி ஏற்க மறுத்ததால் மனமுடைந்த மகேஷ், நன்றாக குடித்துவிட்டு ஆனந்தி ஹாஸ்டல் முன் வந்து நின்று கலாட்டா செய்கிறார்.
மகேஷ் செய்த கலாட்டா
மகேஷ், சுயநினைவின்றி இருப்பதைக் கண்ட மித்ராவும் ஆனந்தியும் எவ்வளவோ தடுகக் முயன்றும் மகேஷை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால், ஆனந்தியின் நண்பர்கள் அன்புவிற்கு போன் செய்து ஹாஸ்டலுக்கு வருமாரு கூறினார். ஆனால், அன்பு வருவதற்குள் அங்கு ஒரு கலாட்டாவே நடந்து முடிந்தது.
கூப்பாடு போட்ட மகேஷ்
மகேஷ், ஆனந்தியைப் பார்த்து நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்ணுனத தவிர வேற என்ன தப்பு பண்ணுனேன்னு கேட்டு கத்தி கூப்பாடு போட்டு மொத்த ஹாஸ்டலையும் வாசலுக்கு கொண்டு வந்துவிட்டார்.
பின், ஹாஸ்டலுக்கு அன்பு வந்ததை பார்த்த மகேஷ், அன்புவிடம், நான் உன்னை நம்புறேன். இங்க இருக்க எல்லாரையும் விட உனஅன நம்புறேன் எனக் கூறி தனது ஆதங்கத்த2யும் வெளிப்படுத்தினார். பின் அன்பு, மகேஷ் சாரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
வருந்தும் அன்பு ஆனந்தி
அப்போது, என்னையும் ஆனந்தியும் சேர்த்து வைத்த விதி இப்படி மகேஷ் சாகை கஷ்டப்படுத்துதே என வருந்திய அன்பு அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
அதே சமயத்தில், மகேஷ் சார் நான் அழரை காதலிக்கவில்லை என்று மட்டும், தான் தெரியும். ஆனால், நான் அன்புவைத் தான் காதலிக்கிறேன் என்பது தெரிந்தால் என்ன ஆகுமோ என நினைத்து வருந்துகிறாள். இதுகுறித்த ப்ரோமோ வீடியோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
தவித்த மகேஷ்
முன்னதாக, சிங்கப்பெண்ணே சீரியலில் தன் பிறந்தநாள் தினத்தன்று நடக்கும் பார்ட்டியில் எப்படியாவது ஆனந்தி மீதான காதலை வெளிப்படுத்த வேண்டும் என மகேஷ் துடியாய் துடித்து வருகிறான். ஆனால் ஆனந்தியை எப்படியாவது மகேஷ் கண்ணில் இருந்து மறைத்து வைக்க வேண்டும் என அன்புவும் அவரது நண்பர்களும் தவியாய் தவித்து வருகின்றனர்.
ஆனந்தியிடம் கெஞ்சிய அன்பு
அதுமட்டுமல்லாமல், மகேஷ் சாருடன் விளையாடும் இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறும், இதற்கு மேல் தன்னால் முடியாது என்றும் ஆனந்தி எத்தனை முறை கூறினாலும் மகேஷ் சார் பிறந்தநாள் முடியும் வரை மட்டும் பொறுத்துக் கொள்ளுமாறு அன்பு ஆனந்தியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
மேலும், மகேஷ் சாரின் பிறந்தநாள் முடிந்த பின் நானே நம் காதலை கூறிவிடுகிறேன். இந்த நாளில் அவரை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அன்பு திட்டவட்டமாக கூறினான். அதற்குள் ஆனந்தியிடம் மகேஷ் காதலை சொல்லாமல் தடுக்க வேண்டும் என மித்ரா ஒருபக்கம் துடித்துக் கொண்டிருந்தாள்.
காதலை சொன்ன மகேஷ்
இத்தனை பேரில் தவிப்பிற்கு மத்தியிலும், மகேஷ் ஆனந்தியை தனியா மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, மண்டியிட்டு பூ கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தினார். இதைப் பார்த்த ஆனந்தியால் இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என நினைத்து, தான் அன்புவைத் தான் காதலிப்பதாக கூறினாள்.
இந்த அதிர்ச்சியை ஏற்க முடியாத மகேஷ் தடுமாறினான், பின் செய்வது அறியாது நின்றான்.
நிதானம் இழந்த மகேஷ்
இந்நிலையில், தன் காதலை ஏற்க மறுத்த ஆனந்தி மேல் உள்ள கோவத்தை அடக்க முடியாமல் நிற்க கூட முடியாத அளவிற்கு குடித்துள்ளான்.
அந்த சமயத்தில், ஆனந்தியின் ஹாஸ்டலுக்கு வந்து பிரச்சனையும் செய்கிறான். ஹாஸ்டல் வாட்ச் மேனை தாக்கி, அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியதுடன் ராத்திரி நேரத்தில் கத்தி கூச்சலி்டான்.
டாபிக்ஸ்