5 பிள்ளைங்களும் நாசமா தான் போகும்.. அன்புவால் உடைந்து போன குடும்பம்.. தவிக்கும் கயல்..
தன் தம்பி அன்பு அவசரத்தில் எடுத்த முடிவால் குடும்பம் மொத்தமும் சுக்குநூறாய் உடைந்து போய் உள்ளதை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் கயல் தவித்து வருகிறார்.
கயல் சீரியலில் வீட்டில் இருக்கும் நிலைமையை கொஞ்சம் கூட யோசிக்காமல் அன்பு ஷாலினியை யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்ய முடிவெடுத்தான். இதை அறிந்த அன்பு குடும்பமும் ஷாலினி குடும்பமும் இவர்கள் இருவரையும் தேட முயற்சித்த நிலையில், கயல் அவர்களை கண்டுபிடித்தார்.
உங்களுக்கு நான் தான் பிரச்சனை
ஆனால், கயலின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காத அன்பு, வீட்டில் தேவி, நீ எல்லாம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான். ஆனால் நான் காதலித்தால் மட்டும் உங்களுக்கு எல்லாம் பிரச்சனை தான். இந்த வீட்டில் தேவி மட்டும் தான் பிறந்தாளா. நான் எல்லாம் என் ஆசையை நிறைவேற்றவே கூடாதா என அன்பு அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பினான்.
ஆதங்கப்பட்ட காமாட்சி
இதனால் பொறுமை இழந்த கயல் அம்மா, கயல் இந்த குடும்பத்திற்காக செய்த தியாகங்களை அன்புவிடம் சொல்லி ஆதங்கப்பட்டாள். இதற்குள் வீட்டில் நடந்த குழப்பங்களால் தேவி மிகவும் மனம் உடைந்த நிலையில், அழுத்தம் தாங்க முடியாமல் மயக்கமடைந்தாள். இதைப் பார்த்த கயல் என்ன செய்வது என்ற பதற்றத்தில் தேவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறாள்.
தவிக்கும் கயல்
மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தேவியின் வளைகாப்பில் நடந்த குளறுபடி, அன்புவின் திருமணம், தன்னை மட்டும் இல்லாமல் தன் உடன் பிறந்தவர்களை நாசமாக போவார்கள் என தம் அம்மாவை வேதவள்ளி சாபமிட்டது, தெருவில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தை பற்றி பேசியது என எல்லாமே கயலின் கண் முன்னே வந்து வந்து சென்றது.
இதையடுத்து, அன்பு, ஷாலினியின் கல்யாணத்தால் உடைந்து போன குடும்பத்தை எப்படி சரிசெய்வது, தேவியின் வாழ்க்கையை எப்படி சரி செய்வது என்ற கேள்வி கயலின் மனதில் எழுந்து அவரை தவியாய் தவிக்க வைத்து வருகிறது. இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
எச்சரித்த வேதவள்ளி
முன்னதாக, அன்புவும் ஷாலினியும் காதலிப்பது ஷாலினியின் அம்மா வேதவள்ளிக்குத் தெரியவர அவர் கயலையும் அவரின் குடும்பத்தையும் எச்சரித்தார். இருந்தாலும், கயல் தன் தம்பிக்கு போலிஸ் ட்ரைனிங் முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுத்திருந்தார். இதனால், அன்புவும் ஷாலினியும் அமைதியாக இருந்து வந்தனர்.
ஆனால், தேவியின் வளைகாப்பு குறித்து பேச வந்த சமயத்தில் வேதவள்ளி கயலின் அம்மாவை கடுமையாக எச்சரித்ததால், அவர் ஷாலினியிடம் அன்புவிடம் இருந்து விலகி இருக்குமாறு கூறினார். இதை தாங்க முடியாத ஷாலினி உடனே அன்புக்கு போன் செய்து நடந்தவற்றை கூறினார்.
ஷாலினியால் வந்த பிரச்சனை
இதனால் ஆத்திரமடைந்த அன்பு, ஷாலினியை அவரது வீட்டிற்கே சென்று கூட்டிச் சென்றார். இதனை சற்றும் எதிர்பாராத வேகவள்ளி மற்றும் கயல் குடும்பத்தினர் அன்புவையும் ஷாலினியையும் தேடி அலைந்தனர்.
இதையடுத்து, அன்புவின் வண்டியை பார்த்து கயலும் மூர்த்தியும் அவர்களை பின் தொடர்ந்து சென்ற சமயத்தில் அவர்கள் இருவரும் கோயிலில் தாலிகட்ட தயாராக இருந்தனர். கயல் எவ்வளவோ எடுத்து கூறியும் அன்பு ஷாலினியை திருமணம் செய்து கொண்டார்.
நான் காதலிச்சா தப்பா
இதுபற்றி கயல் கோபமாக பேசியதற்கு நீயும் காதலித்து தான் கல்யாணம் பண்ண, தேவியும் காதலித்து தான் கல்யாணம் பண்ணுனா ஆனா இப்போ நான் காதலிச்சு கல்யாணம் பண்ணுனா தப்பா என கோவமாக கேட்டார்.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து நின்ற கயல், கோவத்தில் எந்த வார்த்தையும் பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போது, அன்புவின் நண்பர் கயலிடமும் மூர்த்தியிடமும் ஆசிர்வாதம் வாங்குமாறு கூறினார்.
டாபிக்ஸ்