மிருகமாய் மாறி நிற்கும் மகேஷ்.. ஹாஸ்டலில் அடாவடி.. அன்புவிற்கு காத்திருக்கும் சம்பவம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..
தன் காதலை ஏற்க மறுத்த ஆனந்தி மீதுள்ள கோவத்தை தாங்க முடியாமல் குடித்துவிட்டு ஆனந்தி ஹாஸ்டலுக்கு வந்து அடாவடி செய்துள்ளான் மகேஷ்.

சிங்கப்பெண்ணே சீரியலில் தன் பிறந்தநாள் தினத்தன்று நடக்கும் பார்ட்டியில் எப்படியாவது ஆனந்தி மீதான காதலை வெளிப்படுத்த வேண்டும் என மகேஷ் துடியாய் துடித்து வருகிறான். ஆனால் ஆனந்தியை எப்படியாவது மகேஷ் கண்ணில் இருந்து மறைத்து வைக்க வேண்டும் என அன்புவும் அவரது நண்பர்களும் தவியாய் தவித்து வருகின்றனர்.
ஆனந்தியிடம் கெஞ்சிய அன்பு
அதுமட்டுமல்லாமல், மகேஷ் சாருடன் விளையாடும் இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறும், இதற்கு மேல் தன்னால் முடியாது என்றும் ஆனந்தி எத்தனை முறை கூறினாலும் மகேஷ் சார் பிறந்தநாள் முடியும் வரை மட்டும் பொறுத்துக் கொள்ளுமாறு அன்பு ஆனந்தியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
மேலும், மகேஷ் சாரின் பிறந்தநாள் முடிந்த பின் நானே நம் காதலை கூறிவிடுகிறேன். இந்த நாளில் அவரை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அன்பு திட்டவட்டமாக கூறினான். அதற்குள் ஆனந்தியிடம் மகேஷ் காதலை சொல்லாமல் தடுக்க வேண்டும் என மித்ரா ஒருபக்கம் துடித்துக் கொண்டிருந்தாள்.