Singapenne Serial: ஆனந்திக்காக தவிக்கும் மகேஷ்.. வேணுவுக்கு நம்பிக்கை தரும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே அப்டேட்
Singapenne Serial: ஆனந்தி தன்னை விட்டு அதிகமாக விலகிப் போவதாக மகேஷ் ஹாஸ்டல் வார்டனிடம் புலம்புகிறான்.

Singapenne Serial: மகேஷ், அவரது பிறந்த நாளில் ஆனந்தியிடம் காதலை சொல்ல பல முயற்சிகளை எடுத்தார். ஆனால், ஆனந்தி அதிலிருந்து தப்பிக் கொண்டே இருக்க, விடாப்பிடியாக தன் காதலை சொன்னார். ஆனால், ஆனந்தி மகேஷின் காதலை ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன், தான் எப்போதும் உங்களை காதலிக்க மாட்டேன் என்றும் உறுதியாக கூறினார்.
ரகளை செய்த மகேஷ்
இதனால், மனம் தாங்க முடியாத மகேஷ், ஆனந்தியின் ஹாஸ்டலுக்கு குடித்துவிட்டு வந்து ரகளை செய்தார். அவரை ஆனந்தியும், மித்ராவும் சமாதானம் செய்தும் அங்கிருந்து நகர வைக்க முடியவில்லை. பின், அன்பு அந்த சமயத்தில் வந்து உதவினார்.
வார்டனிடம் உதவி
பின், தன் தவறை உணர்ந்த மகேஷ், ஆனந்தியிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஹாஸ்சல் வார்டனிடமும் மன்னிப்பு கேட்டார். அத்துடன், என்னையும் ஆனந்தியையும் எப்படியாவது ஒன்றாக சேர்த்து வைத்து விடுமாறு ஹாஸ்டல் வார்டனிடம் கோரிக்கையும் விடுத்தார்.