Singapenne Serial: கத்தி முனையில் கடத்தப்பட்ட ஆனந்தி.. எலும்பை எண்ண வரும் அழகன்.. பரபரப்பான தருணத்தில் சிங்கப்பெண்ணே..
Singapenne Serial: ஆனந்தியை கத்தி முனையில் கடத்தியவர்களிடமிருந்து அவரைக் காப்பாற்ற களத்தில் இறங்குகிறார் அழகன்.

Singapenne Serial: கத்தி முனையில் கடத்தப்பட்ட ஆனந்தி.. எலும்பை எண்ண வரும் அழகன்.. பரபரப்பான தருணத்தில் சிங்கப்பெண்ணே..
Singapenne Serial: அன்பு அம்மாவிடம் இருந்து ஒரு கும்பல் செயின் பறித்து சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து அவரது அம்மாவின் செயினை மாட்க ஆனந்தியும் அன்புவும் முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனந்தி கழுத்தில் கத்தி
போலீஸ் ஸ்டேஷனிற்கும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கும் அழைந்து திரிந்து வந்தனர். பின் ஒரு வழியாக அவர்களைக் கண்டுபிடித்து செயினை ஒரு வழியாக வாங்கினர்.
அந்த சமயத்தில், அங்கு மறைந்திருந்த போலீஸ் செயினை வாங்கும் சமய்த்தில் வந்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத செயின் திருடர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஆனந்தியின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினர். மேலும், அவரைக் கத்தி முனையில் கடத்திச் சென்று மிரட்டி வருகின்றனர்.