Singapenne Serial: குற்ற உணர்ச்சி இல்லாத கருணாகரன்.. பாடம் எடுக்க நினைக்கும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல்
Singapenne Serial: கார்மெண்ட்சில் வேலை செய்யும் நபருக்கு அவசர உதவி தேவைப்பட்டும் அதை செய்ய மறுத்த கருணாகரனுக்கு பாடம் புகட்ட ஆனந்தி விரும்புகிறாள்.

Singapenne Serial: அன்பு அம்மா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அன்புவும் ஆனந்தியும் மீண்டும் காராமெண்ட்சிற்கு வேலைக்கு வந்தனர். அப்போது, கருணாகரன் அவர்கள் இருவரையும் வேண்டுமென்றே வம்பிழுத்தார். அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்றாலும் கம்பெனிக்கு வேலைக்கு வருவது பெரிய விஷயம் என்றும் நக்கலாக பேசினார்.
கண்டுகொள்ளாத கருணாகரன்
இதற்கிடையில், கார்மென்ட்சிஸ் வேலை செய்த ஒருவருக்கு ஷாக் அடித்து கீழே விழுந்தார். அவரைக் காப்பாற்ற மற்ற பணியாளர்கள் உதவினர், அதைப் பார்த்த கருணாகரன், அவனுக்கு முதலுதவி எல்லாம் தேவையில்லை. அப்படியே விட்டாலே சரி ஆகிடுவான் எனக் கூறி அவரை மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல மறுத்தான்.
மித்ராவுக்கு வந்த தகவல்
ஆனால், நேரம் ஆக ஆக அந்த நபர் எந்த உணர்சச்சியும் இல்லாமல் கிடந்தார். இதைப்பார்த்த மற்ற பணியாளர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் இன்னும் கண் முழிக்காமல் உள்ளதாக கருணாகரனிடமும் மித்ராவிடமும் கம்பெனி ஊழியர் கூறினார்.
