Singapenne Serial: வார்டன் ரூமிலே கை வைத்து வேலையை ஆரம்பித்த மித்ரா.. ஆனந்தியிடம் புலம்பும் வார்டன்..
Singapenne Serial: ஆனந்தி ஹாஸ்டல் வார்டன் வைத்திருந்த குழந்தையின் விளையாட்டு பொருட்களை மித்ரா அவரது அறைக்கே சென்று திருடிய சம்பவம் நடந்துள்ளது.

Singapenne Serial: அன்புவிற்கு துளசியுடன் நடந்த திருமண நிச்சயதார்த்த விழா நின்று போனதால், அன்புவிடம் பேசுவதையே அவரது அம்மா நிறுத்திக் கொண்டார். அன்பு, தன் அம்மாவை எவ்வளவோ சமாளிக்க முயன்றும் அது முடியாமல் போனதால், வருத்தத்தில் இருந்தார்.
அன்பு அம்மாவிற்காக உருகும் ஆனந்தி
அந்த சமயத்தில் செயின் பறிப்பாளர்கள் 2 பேர் அன்பு அம்மாவின் கழுத்தில் இரு்த செயினை பறிக்க முயற்சி செய்தனர். இதில், அன்பு அம்மாவிற்கு பலத்த அடி பட்டது. இதைப் பார்த்த ஆனந்தி, அவரை மருத்துவமனையில் அனுமதித்து பார்த்துக் கொண்டார்.
இருந்தாலும், தன்னை காப்பாற்றி இரவு முழுவதும் கண் முழித்து, கடவுளிடம் பரிகாரம் செய்து காப்பாற்றியது ஆனந்தி தான் எனத் தெரியாததால் அன்பு அம்மா தற்போதும் ஆனந்தி மீது கோபமாகத் தான் இருக்கிறார்கள்.
கேவலப்படுத்தும் கருணாகரன்
இதனால், அன்பு தன் அம்மாவின் செயலுக்கு ஆனந்தியிடம் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், அன்பு அம்மா குணமடைந்த உடன் இருவரும் மீண்டும் வேலைக்கு வந்தனர். அவர்களை கருணாகரன் மிகவும் கேவலமாக நடத்தினார். அதற்கு அவர்கள் தக்க பதிலடி கொடுக்க நினைத்தனர்.
ஹாஸ்டல் வார்டனை குறிவைக்கும் மித்ரா
இதற்கிடையில், ஆனந்தியின் ஹாஸ்டல் வார்டன், அவரது குழந்தையின் விளையாட்டு பொருட்களை வைத்து அவ்வப்போது பேசி வந்த நிலையில், மகேஷ் தான் அவரது மகன் என அவர் கூறி வருகிறார். இதனால், ஆனந்தி மேல் மகேஷ் வைத்திருக்கும் காதலுக்காகவும், தன் மகன் தன்னிடம் கேட்ட உதவிக்காகவும் எப்படியாவது ஆனந்தியை மகேஷுடன் சேர்த்து வைக்க வேண்டும் என திட்டம் தீட்டுகிறாள்.
புலம்பும் வார்டன்
இதற்குள் ஆனந்தியை பழிவாங்கத் துடிக்கும் மித்ரா, ஹாஸ்டல் வார்டனின் அறையில் இருக்கும் அந்த குழந்தையின் விளையாட்டுப் பொருட்களை திருடிச் செல்கிறாள். இதையறிந்து பதற்றமடைந்த வார்டன், ஆனந்தியிடம் அதைச் சொல்லி புலம்புகிறாள்.
இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா ஆனந்தியை இந்த விளையாட்டு பொருட்களை எல்லாம் வைத்து எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என திட்டம் தீட்டுகிறாள். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
அன்புவை வருத்தப்பட செய்த அம்மா
முன்னதாக, அன்பு அவரது அம்மா மார்க்கெட் போவதை அறிந்து நானும் உங்களுடன் வரேன் எனக் கூறி உள்ளார். ஆனால், அவரது அம்மாவோ அவரை உதாசினப்படுத்தி பாத்திரங்களை தூக்கி எறிந்து கோவத்தை வெளிப்படுத்தி சென்றார். இதனால் வருத்தத்தில் இருந்த அன்புவிற்கு காத்திருந்தது அதிர்ச்சி.
அன்பு அம்மா மார்க்கெட் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் சைக்கிளில் வந்த ஆனந்தி அவரைப் பார்க்கிறார். அவரைப் பார்த்து பேசலாமா வேண்டாமா என்ற தயக்கத்திலேயே இருந்த ஆனந்தி, ஒரு முடிவெடுத்து அவரிடம்பேசமுயன்றார்.
அன்பு அம்மாவிற்கு ஆபத்தா?
அந்த சமயத்தில் முகத்தில் துணி கட்டிக் கொண்டு காத்திருந்த 2 பேர் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
முதலில் இவர்கள் ஆனந்தியை கடத்த தான் வந்திருப்பார்களோ என்ற பயம் அனைவருக்கும் இருந்தது. இந்நிலையில் பார்த்தால் அன்பு அம்மாவை இவர்கள் தாக்கி உள்ளனர். இதை அறிந்த ஆனந்தி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அன்புவிற்கு தகவல் கொடுத்தாள்,
மருத்துவமனையில் அன்பு அம்மா
நடந்த சம்பவத்தின் பதற்றம் குறையாத ஆனந்தியின் குரலைக் கேட்டு பயந்த அன்பு உடனடியாக அவரது தங்கையை கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார். பின் இருவரும் சந்தித்த போது ஆனந்தி நடந்த விஷயங்களைகூறினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்