'முடிச்சு விட்டாங்க போங்க'.. ஆட்டம் பாட்டம்ன்னு போயிட்டு இருந்த மகேஷை ஆஃப் பண்ணிய ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'முடிச்சு விட்டாங்க போங்க'.. ஆட்டம் பாட்டம்ன்னு போயிட்டு இருந்த மகேஷை ஆஃப் பண்ணிய ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

'முடிச்சு விட்டாங்க போங்க'.. ஆட்டம் பாட்டம்ன்னு போயிட்டு இருந்த மகேஷை ஆஃப் பண்ணிய ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Jan 01, 2025 06:48 AM IST

மகேஷின் பிறந்தநாள் விழாவில் ஆனந்தி, தான் அன்புவை விரும்புவதாக மகேஷிடம் சொல்லி கதறி அழுதுள்ளாள்.

'முடிச்சு விட்டாங்க போங்க'.. ஆட்டம் பாட்டம்ன்னு போயிட்டு இருந்த மகேஷை ஆஃப் பண்ணிய ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
'முடிச்சு விட்டாங்க போங்க'.. ஆட்டம் பாட்டம்ன்னு போயிட்டு இருந்த மகேஷை ஆஃப் பண்ணிய ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

இதையொட்டி தான் நேற்று கார்மெண்ட்சில் வேலை செய்பவர்களை சந்தித்த மகேஷ் தன் பிறந்த நாள் குறித்த அறிவிப்பை கூறினார்.

மேலும், அந்த நாளில் ஒரு முக்கியமான அறிவிப்பையும் கூறுவதாக அறிவித்தார். அதற்கு கம்பெனியில் வேலை செய்த நபர் ஒருவர் உங்கள் கல்யாண அறிவிப்பா எனக் கேட்க அது சஸ்பென்ஸ் எனக் கூறினார்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

இந்நிலையில், மகேஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் அசத்தலாக இருக்க வேண்டும் என எண்ணி, கம்பெனியில் உள்ளவர்கள் அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டினர்.

இதற்கிடையில், மகேஷ் ஆனந்தியிடம் காதலை சொன்னால் இத்தனை நாள் அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை மொத்தமும் உடைந்து போய்விடும் என்ற பயத்தில் அன்பு தவித்து வருகிறான்.

காணாமல் போன மகேஷ் ஆனந்தி

பிறந்தநாள் நிகழ்ச்சியில் சோகமாக இருந்த அன்பு, அப்போது தான் ஆனந்தியை காணவில்லை என்பதையே உணர்கிறான். அத்தோடு மகேஷிற்காக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த மித்ராவும் மகேஷும் ஆனந்தியும் காணாமல் போனதை உணர்கிறாள். இதனால், ஒருவேளை மகேஷ் ஆனந்தியிடம் தன் காதலை கூறிவிட்டானோ என்ற பயத்தில் இருவரும் தவிக்கின்றனர்.

உண்மையை உடைத்த ஆனந்தி

அன்பு மற்றும் மித்ராவின் கணிப்புகள் பொய் சொல்லவில்லை. நிகழ்ச்சிகளுக்கு நடுவே, ஆனந்தியை யாரும் இல்லாத இடத்திற்கு மகேஷ் தனியாக அழைத்து வருகிறான். அப்போது, ஆனந்தி முன் மண்டியிட்டு பூவைக் கொடுத்து தன் காதலை சொல்கிறான். மேலும், உன்னை கல்யாணம் செய்ய ஆசைப்படுவதாகவும் கூறினான்.

இதையெல்லாம் கேட்ட ஆனந்தி மகேஷிடம் கை எடுத்து கும்பிட்டு, தான் அன்புவைத் தான் மனசார காதலிப்பதாகக் கூறி அழுகிறாள். இதை சற்றும் எதிர்பாராத மகேஷ் அப்படியே உறைந்து போய் நிற்கிறான்.

இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

சவால் விட்ட ஆனந்தி

முன்னதாக, அன்புவும் ஆனந்தியும் காதலிப்பதை அறிந்த அன்பு அம்மா அவருக்கு தன் அண்ணன் மகள் துளசியுடன் கல்யாணம் செய்து வைக்க நினைத்து போட்ட திட்டம் எல்லாம் வீணாகப் போனது.

இதையடுத்து, அன்புவிற்கு இத்தனை நாள் ஆறுதல் சொல்லி வந்த ஆனந்தி தற்போது தீர்க்கமான முடிவையும் எடுத்துள்ளார். அன்பு அம்மாவின் வாயாலேயே அவர் தன்னை மருமகள் என சொல்லும் நாள் வரும் வரை தான் ஓய மாட்டேன் என அன்புவிடம் தன் நண்பர்கள் முன் சவால் விட்டுள்ளார் ஆனந்தி.

மகேஷை காதலிக்கும் மித்ரா

இது இப்படி இருக்க, மகேஷின் அம்மா மித்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்போது, மித்ராவிடம் யாரையாவது காதலிக்கிறியா எனக் கேட்க மித்ராவும் தயங்கி தயங்கி மகேஷை காதலிப்பதாக சொல்கிறார். இதையடுத்து மகேஷின் அம்மா மித்ராவையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் என்ன சொல்வது எனத் தெரியாமல் மித்ரா அழுதுகொண்டே நிற்கிறாள்.

உறுதியளித்த மகேஷ் அம்மா

இந்த சமயத்தில் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்த மகேஷின் அம்மா மித்ராவிற்கு வாக்கு கொடுத்துள்ளார். அதாவது இனி என் வீட்டு மருமகள் நீ தான் எனக் கூறி அழுது கொண்டிருந்த மித்ராவை சமாதானம் செய்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.