கயல் தலைமையில் நடந்த அன்பு கல்யாணம்.. வேதவள்ளியால் இனி வெடிக்கப்போகும் பிரச்சனை என்ன? கயல் சீரியல் அப்டேட்
நீயும், தேவியும் காதலித்து தான கல்யாணம் செஞ்சீங்க இப்போ நான் கல்யாணம் பண்ணுனா உங்களுக்கு வலிக்குதா என கயலிடம் அவர் தம்பி அன்பு கோவமாக பேசியுள்ளார்.
வீட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் தன் தங்கை தேவியின் வளைகாப்பு நிகழ்ச்சியை சிறப்பாக செய்ய வேண்டும் என கயல் தீவிரமாக முயற்சி செய்து வந்த நிலையில், தேவிக்காக வாங்கிய நகைகளை திருடர்களிடம் பறிகொடுத்து தவித்து வந்தார். இந்தப் பிரச்சனையை சமாளித்து வெளியே வருவதற்குள் அடுத்த பிரச்சனையை கிளப்பியுள்ளார் கயலின் தம்பி அன்பு.
எச்சரித்த வேதவள்ளி
அன்புவும் ஷாலினியும் காதலிப்பது ஷாலினியின் அம்மா வேதவள்ளிக்குத் தெரியவர அவர் கயலையும் அவரின் குடும்பத்தையும் எச்சரித்தார். இருந்தாலும், கயல் தன் தம்பிக்கு போலிஸ் ட்ரைனிங் முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுத்திருந்தார். இதனால், அன்புவும் ஷாலினியும் அமைதியாக இருந்து வந்தனர்.
ஆனால், தேவியின் வளைகாப்பு குறித்து பேச வந்த சமயத்தில் வேதவள்ளி கயலின் அம்மாவை கடுமையாக எச்சரித்ததால், அவர் ஷாலினியிடம் அன்புவிடம் இருந்து விலகி இருக்குமாறு கூறினார். இதை தாங்க முடியாத ஷாலினி உடனே அன்புக்கு போன் செய்து நடந்தவற்றை கூறினார்.
வீட்டை விட்டு வெளியேறி நடந்த அன்பு ஷாலினி
இதனால் ஆத்திரமடைந்த அன்பு, ஷாலினியை அவரது வீட்டிற்கே சென்று கூட்டிச் சென்றார். இதனை சற்றும் எதிர்பாராத வேதவள்ளி மற்றும் கயல் குடும்பத்தினர் அன்புவையும் ஷாலினியையும் தேடி அலைந்தனர்.
இதையடுத்து, அன்புவின் வண்டியை பார்த்து கயலும் மூர்த்தியும் அவர்களை பின் தொடர்ந்து சென்ற சமயத்தில் அவர்கள் இருவரும் கோயிலில் தாலிகட்ட தயாராக இருந்தனர். கயல் எவ்வளவோ எடுத்து கூறியும் அன்பு ஷாலினியை திருமணம் செய்து கொண்டார்.
நான் காதலிச்சா தப்பா
இதுபற்றி கயல் கோபமாக பேசியதற்கு நீயும் காதலித்து தான் கல்யாணம் பண்ண, தேவியும் காதலித்து தான் கல்யாணம் பண்ணுனா ஆனா இப்போ நான் காதலிச்சு கல்யாணம் பண்ணுனா தப்பா என கோவமாக கேட்டார்.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து நின்ற கயல், கோவத்தில் எந்த வார்த்தையும் பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போது, அன்புவின் நண்பர் கயலிடமும் மூர்த்தியிடமும் ஆசிர்வாதம் வாங்குமாறு கூறினார்.
ஆசிர்வாதம் வாங்கும் போது வந்த வேதவள்ளி
இதையடுத்து அன்புவும் ஷாலினியும் கயல் மூர்த்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் சமயத்தில் சரியாக வேதவள்ளி கோயிலுக்குள் என்ட்ரி கொடுக்கிறார். இந்த காட்சியை பார்த்ததும் அவருக்கு தாங்க முடியாத கோவம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கோவிலில் இருந்து நேராக வீட்டிற்கு சென்ற வேதவள்ளி, அங்கு இருந்த கயல் குடும்பத்தை மிகவும் அசிங்கப்படுத்தியதுடன், அன்பு ஷாலினியை கல்யாணம் செய்து கொண்டதையும் கூறி சண்டை போட்டார். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், வேதவள்ளி ஷாலினியின் திருமணத்தை ஏற்றுக் கொள்வாரா, புதிய பிரச்சனையை கயல் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்