Singapenne Serial: 'இதான் நீ.. என் பிரச்சனையே இது தான்..' ஆனந்தியிடம் புலம்பித் தள்ளிய அன்பு- சிங்கப்பெண்ணே சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: 'இதான் நீ.. என் பிரச்சனையே இது தான்..' ஆனந்தியிடம் புலம்பித் தள்ளிய அன்பு- சிங்கப்பெண்ணே சீரியல்

Singapenne Serial: 'இதான் நீ.. என் பிரச்சனையே இது தான்..' ஆனந்தியிடம் புலம்பித் தள்ளிய அன்பு- சிங்கப்பெண்ணே சீரியல்

Malavica Natarajan HT Tamil
Jan 11, 2025 09:28 AM IST

Singapenne Serial: அன்புவின் அம்மா செயின் திருடர்களால் அடிபட்டு மருத்துவமனையில் உள்ளதை நினைத்து அன்பு, ஆனந்தியிடம் புலம்பி வருகிறார்.

Singapenne Serial: 'இதான் நீ.. என் பிரச்சனையே இது தான்..' ஆனந்தியிடம் புலம்பித் தள்ளிய அன்பு- சிங்கப்பெண்ணே சீரியல்
Singapenne Serial: 'இதான் நீ.. என் பிரச்சனையே இது தான்..' ஆனந்தியிடம் புலம்பித் தள்ளிய அன்பு- சிங்கப்பெண்ணே சீரியல்

அன்புவை வருத்தப்பட செய்த அம்மா

இந்நிலையில், அன்பு அவரது அம்மா மார்க்கெட் போவதை அறிந்து நானும் உங்களுடன் வரேன் எனக் கூறி உள்ளார். ஆனால், அவரது அம்மாவோ அவரை உதாசினப்படுத்தி பாத்திரங்களை தூக்கி எறிந்து கோவத்தை வெளிப்படுத்தி சென்றார். இதனால் வருத்தத்தில் இருந்த அன்புவிற்கு காத்திருந்தது அதிர்ச்சி.

அன்பு அம்மா மார்க்கெட் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் சைக்கிளில் வந்த ஆனந்தி அவரைப் பார்க்கிறார். அவரைப் பார்த்து பேசலாமா வேண்டாமா என்ற தயக்கத்திலேயே இருந்த ஆனந்தி, ஒரு முடிவெடுத்து அவரிடம் பேச முயன்றார்.

அன்பு அம்மாவிற்கு ஆபத்தா?

அந்த சமயத்தில் முகத்தில் துணி கட்டிக் கொண்டு காத்திருந்த 2 பேர் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

முதலில் இவர்கள் ஆனந்தியை கடத்த தான் வந்திருப்பார்களோ என்ற பயம் அனைவருக்கும் இருந்தது. இந்நிலையில் பார்த்தால் அன்பு அம்மாவை இவர்கள் தாக்கி உள்ளனர்.இதை அறிந்த ஆனந்தி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அன்புவிற்கு தகவல் கொடுத்தாள்,

மருத்துவமனையில் அன்பு அம்மா

நடந்த சம்பவத்தின் பதற்றம் குறையாத ஆனந்தியின் குரலைக் கேட்டு பயந்த அன்பு உடனடியாக அவரது தங்கையை கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார். பின் இருவரும் சந்தித்த போது ஆனந்தி நடந்த விஷயங்களை கூறினார்.

அன்பு தங்கையை அனுப்பி விட்ட ஆனந்தி

இதையடுத்து, மருத்துவமனைக்கு பதற்றத்துடன் அன்புவும் அவரது தங்கையும் கிளம்பி வந்தனர். அப்போது தான் அன்புவின் தங்கைக்கு பரிட்சை இருப்பது தெரியவந்தது. இதனால், அவருக்கு தைரியம் சொன்ன ஆனந்தி, பரிட்சைக்கு கிளம்புமாறு அறிவுறுத்தினார்,

காலையிலயே தோனுச்சி

பின், மருத்துவமனையின் கதவு வழியாக பார்த்துக் கொண்டிருந்த அன்பு, நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன். காலையிலேயே எனக்கு அம்மாவுடன் மார்க்கெட்டிற்கு போகனும்ன்னு தோனுச்சு. அதனால தான் நான் அப்போவே அம்மாகிட்ட கேட்டேன். அம்மா வரக்கூடாதுன்னு கோவமா சொன்னதுனால நானும் அப்படியே விட்டுட்டேன்.

இதான் உனக்கும் எனக்கும் இருக்க வித்யாசம்

ஆனா நீ அம்மா உன்ன திட்டியும் நீ அவங்ககிட்ட பேசிருக்க. அவங்க பின்னாடியே போயிருக்க. ஆனா நான் அப்படி பண்ணல. என்ன அவங்க திட்டி இருந்தாலும் கூட போயிருக்கனும். நான் அத பண்ணல. இதான் உனக்கும் எனக்கும் இருக்க வித்யாசம்

அம்மா நிலமை என்ன ஆகிருக்கும்

நீ மட்டும் அந்த இடத்துல அம்மா கூட இல்லைன்னா இன்னைக்கு அம்மா நிலைமை என்ன ஆகிருக்கும். யோசிச்சு பாக்கவே பயமா இருக்கு. எங்க அப்பா போனதுக்கு அப்புறம் இந்த பெரிய சிட்டில தனி ஆளா எந்த சொந்தபந்தமும் இல்லாம கஷ்டப்பட்டு எங்க ரெண்டு பேரையும் வளத்தாங்க. என்னசதான் எங்க மேல கோவமா இருந்தாலும் அடுத்த நிமிஷமே எங்ககூட வந்து பேசுவாங்க என்று அன்பு ஆனந்தியிடம் புலம்பினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.