Jani Master: ஆமா... அது நான் தான்... மாட்டிக்கொண்ட மாஸ்டர்... காலியான கெரியர்! பரிதாபத்தில் மனைவி-jani master confess his crime on sexual harassment - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jani Master: ஆமா... அது நான் தான்... மாட்டிக்கொண்ட மாஸ்டர்... காலியான கெரியர்! பரிதாபத்தில் மனைவி

Jani Master: ஆமா... அது நான் தான்... மாட்டிக்கொண்ட மாஸ்டர்... காலியான கெரியர்! பரிதாபத்தில் மனைவி

Malavica Natarajan HT Tamil
Sep 22, 2024 03:34 PM IST

Jani Master: தன்னிடம் உதவி நடன இயக்குநராக இருந்த பெண்ணிற்கு தான் பாலியல் தொல்லை அளித்தது உண்மை தான் என நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் குற்றத்தை ஒப்புக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Jani Master: ஆமா... அது நான் தான்... மாட்டிக்கொண்ட மாஸ்டர்... காலியான கெரியர்! பரிதாபத்தில் மனைவி
Jani Master: ஆமா... அது நான் தான்... மாட்டிக்கொண்ட மாஸ்டர்... காலியான கெரியர்! பரிதாபத்தில் மனைவி

அந்த வண்ணம் தமிழில் ஹலமத்தி ஹபிபோ, ரஞ்சிதமே போன்ற ஹிட் அடித்த பல பாடல்களுக்கு காரணமாக அமைந்தவர் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர். இவரிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றிய பெண்ணை சுமார் 16 வயதிலிருந்து பாலியல் ரீதியாக இவர் துன்புறுத்தி வந்துள்ளார் என புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளது.

இது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தற்போது பேசு பொருளாக அமைந்துள்ளது. இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் நடன இயக்குநராக ஜானி மாஸ்டர் பணியாற்ற பிலிம் சேம்பர் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலியல் புகார்

ஜானி மாஸ்டர் என அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடனக் கலைஞராக செயல்பட்டு வந்தார். இவருக்கு சமீபத்தில் தேசிய விருது கூட அளிக்கப்பட்டது. இந்நிலையில், உதவி பெண் நடனக் கலைஞர் ஒருவர் ஜானி மாஸ்டர் மீது ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.

அந்த பெண் தனது புகாரில், எனக்கு 16 வயது இருக்கும் போதிலிருந்தே ஜானி மாஸ்டர் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை அளித்து வருகிறார் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தை அறிந்த ஜானி மாஸ்டர் பெங்களூருவில் தலைமறைவாக பதுங்கி இருந்தார். பின் அவரை கண்டறிந்த போலீசார் கைது செய்து 14 நாள் காவலில் எடுத்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையில், பெண் உதவி நடனக் கலைஞருக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மை தான் என ஒப்புக் கொண்டுள்ளார்.

என்ன செய்யப் போகிறார் ஜானி மாஸ்டர் மனைவி

ஜானி மாஸ்டர் கைது குறித்து அவரது மனைவி சுமலதா என்ற ஆயிஷா பேசுகையில், எனது கணவர் அப்பண்ணுக்கு உதவி தான் செய்து வந்தார். அப்பெண்ணுக்கு சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை. அதற்கு உதவியது என் கணவர் தான். பாலியல் தொல்லை தந்த நபருடன் அப்பெண் ஏன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என பல கேள்விகளை முன்வைத்தார்.

அத்தோடு நிறுத்தாமல், தன் கணவர் குற்றவாளி அல்ல. அப்படி அவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற புகாரை யாரேனும் நிரூபித்தால் தான் கணவர் ஜானி மாஸ்டரை விட்டு விலகுவதாகவும் சவால் விட்டுள்ளார். இப்போது போலீசாரின் விசாரணையில் ஜானி மாஸ்டரே குற்றத்தை ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.