தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Janhvi Kapoor Wish To Act With Vijay Sethupathi

Janhvi kapoor: விஜய் சேதுபதியிடம் வாய்ப்பு கேட்ட ஜான்வி

Aarthi V HT Tamil
Dec 06, 2022 09:53 AM IST

நானும் ரவுடி தான் படத்தைப் பார்த்த பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஜான்வி கூறினார்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர் (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

அத்துடன் நானும் ரவுடி தான் படத்தைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதிக்கு போன் செய்த சம்பவம் குறித்து நினைவு கூர்ந்தார்.

பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த ஜான்வி, “நான் விஜய் சேதுபதியிடம் பேசினேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நானும் ரவுடி தான் படத்தை 100 ஆவது முறையாக பார்த்த பிறகு, அவருக்கு போன் செய்தேன். 

நான் உங்களின் பெரிய ரசிகை, நீங்கள் எப்போதாவது ஏதாவது ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டும் என நினைத்தால் அதற்கான ஆடிஷனில் கலந்து கொள்வேன். நான் உங்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என அவரிடம் சொன்னேன்” என்றார். 

அதற்கு அவர்” ஐயோ… ஐயோ… என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் மறுத்தாரா அல்லது வெட்கப்பட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஆர்வமாக இருந்ததால் அவர் ஆச்சரியப்பட்டார்” என்றார்.

ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் மிலி படம் வெளியானது. மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்காகும். அடுத்தாக வருண் தவானுடன் பவால் மற்றும் ராஜ்குமார் ராவுடன் திரு மற்றும் திருமதி மஹி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்