Janhvi Kapoor: இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர்..சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி! தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர்-janhvi kapoor says mom sridevi started fighting with boney like a northindian - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Janhvi Kapoor: இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர்..சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி! தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர்

Janhvi Kapoor: இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர்..சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி! தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 26, 2024 10:00 PM IST

Janhvi Kapoor: காலை டிபனுக்கு ஆலு பரோட்டாவுக்கு பதிலாக இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர் செயலுக்கு சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி, அடிக்கடி அப்பாவிடம் சண்டை போட்டதாக தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

Janhvi Kapoor: இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர்..சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி! தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர்
Janhvi Kapoor: இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர்..சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி! தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர்

இந்த மாதம் தி கோட் படத்துக்கு பின் பெரிய படமாக தேவரா பார்ட் 1 உருவாகியுள்ளது. இதையடுத்து படத்தின் பல்வேறு புரொமோஷன்களிலும் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

ஜான்விக்கு உணவு அனுப்பிய ஜூனியர் என்டிஆர்

வட இந்தியாவில் பிரபலமான டிவி ஷோவாக காஃபி வித் கபில் இருந்து வருகிறது. இதில் பிரபலங்களை அழைத்து அவர்களின் வாழ்க்கை சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து பேசுவதுண்டு. அந்த வகையில் தேவரா படத்தின் புரொமோஷனின் ஒரு பகுதியாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சயிப் அலிகான் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது படப்பிடிப்பின்போது நடந்த சம்பவங்கள் பற்றி ஜூனியர் என்டிஆர் கூறும்போது, தேவரா ஷுட்டிங்கின் போது ஹைதராபாத்தில் தங்கியிருந்த ஜான்வி கபூர் வீட்டுக்கு இரண்டு முறை சாப்பாடு அனுப்பினேன். அப்போது அவர் பதிலுக்கு எனனால் பதிலுக்கு செய்ய முடியவில்லை என சங்கடமாக உணர்ந்ததாக தெரிவித்தார்.

தாய், தந்தை உறவு குறித்து ஜான்வி கபூர்

நிகழ்ச்சியின்போது தனது தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர், தாயாரும், மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவிக்கும் இடையிலான உறவு குறித்து எமோஷலனாக பேசினார். "எனது அப்பா தென் இந்தியராகவே தன்னை மாற்றிக்கொண்டார். காலை உணவாக ஆலு பரோட்டாவுக்கு பதிலாக இட்லி, சாம்பார் என மாறினார். அதன் விளைவாக தாயார் வட இந்தியா பெண் போல் சண்டைக்கோழியாக மாறி அவரிடம் அடிக்கடி சண்டை போட்டார்" என்றார்.

ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சயீப் அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கும் கபில் ஷோ எபிசோடு நெட்பிளிக்ஸ் தளத்தில் வரும் சனிக்கிழமை ஸ்டிரீமிங் ஆக இருக்கிறது.

 

தமிழ் பேசிய ஜான்வி கபூர்

கடந்த வாரம் தேவரா படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழில் பேசிய ஜான்வி கபூர் அனைவரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கினார்.

அந்த நிகழ்ச்சியில், "சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எனக்கு என் அம்மாவிடம் இருக்கும் சிறந்த நினைவலைகள் இங்குதான் உள்ளது.

நீங்கள் அவர் மீது காட்டிய அன்புதான் நானும் என் குடும்பமும் இந்த நிலையில் இருக்க காரணம். அதற்கு நான் எப்போதும் கடமைபட்டிருக்கிறேன். தாயாருக்கு கொடுத்த அதே அன்பை எனக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

தாயார் ஸ்ரீதேவி பற்றி நினைவலைகளை பேசும் போது ஜான்வியின் தமிழ் பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

தேவரா படம்

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் தேவரா: பார்ட் 1 கடற்கரை அருகே அமைந்திருக்கும் நகரத்தை தீய சக்தி, வில்லன்களிடமிருந்து ஹீரோ காப்பாற்றும் கதையம்சத்தை கொண்டதாக உள்ளது. படத்தில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் வில்லனாக நடித்துள்ளார். ஜான்வி கபூர் தங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன் வெளியான படத்தின் ட்ரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததுடன், தேவரா ரிலீஸ் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.