தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Janhvi Kapoor Opens Up About Her South Debut Says I Am Coming Closer To My Roots

Janhvi Kapoor: ‘என்னோட ஆணி வேரை நெருங்கிட்டேன்’ - ஜான்வி கபூர் ஓபன் டாக்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 23, 2024 06:43 PM IST

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாவது பற்றி மனம் திறந்த நடிகை ஜான்வி கபூர் !!

ஜான்வி கபூர்!
ஜான்வி கபூர்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் நேற்று தர்மா புரடக்சனில் ‘சன்னி சங்கரி கி துளசி குமாரி’ எனும் புதிய திரைப்படத்திலும் கமிட் ஆனதை அறிவித்தார். 

சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகை ஜான்வி கபூர், தான் தென்னிந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் தேவாரா படம் பற்றி மனம் திறந்து பேசினார். 

அவர் பேசும் போது, “ஒரு மிகப்பெரிய படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இந்த படத்தின் மூலம் நான் எனது வேர்களை நெருங்கியிருக்கிறேன். இப்போது தெலுங்கு மொழியையும் நான் கற்று வருகிறேன் என்று கூறியுள்ளார்.

ஜான்வி கபூரின் தாயாரும், பழம்பெரும் நடிகையுமான ஸ்ரீதேவி, ஜூனியர் என்டிஆரின் தாத்தா - என்.டி ராமாராவ் உடன் தனது தென்னிந்திய அறிமுகத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி, தேவாரா, உலஜ் போன்ற பிரமாண்டமான வெளியீடுகளுடன், சன்னி சங்கிகாரி கி துளசி குமாரி என ஜான்வி கபூரின் திரைப்பட வரிசை மிகச்சிறப்பாக உள்ளது.

நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் குடும்ப விழா ஒன்றில் கலந்து கொள்ள கணவர் போனி கபூருடன் சென்றார். அப்போது திடீரென அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பிப்ரவரி 24 ஆம் தேதி உயிரிழந்தார். இது அதிர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சர்ச்சையையும் கிளப்பியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்