Janhvi Kapoor Discharged: ஃபுட்பாய்சனுக்கு சிகிச்சை..!டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஜான்வி கபூர் - அப்டேட் கொடுத்த போனி கபூர்
இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஜான்வி கபூர் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது தந்தை போனி கபூர் அப்டேட் கொடுத்துள்ளார். அவரது சகோதரி குஷி கபூர், காதலன் என கிசுகிசுக்கப்படும் ஷிகர் பஹாரியா ஆகியோர் ஜான்வியை கவனித்து வருகிறார்களாம்.

ஃபுட்பாய்சன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், உடல் நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ஜான்வி கபூர் உடல் நலம் அப்டேட்
ஜான்வி கபூர் உடல்நிலை தொடர்பாக பிரபல ஊடகத்தின் கூற்றுப்படி, ஜான்வி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது வீட்டில் இருக்கிறார். இந்த செய்தியை அவரது தந்தை போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஜான்வி தற்போது நலமுடன் இருப்பதாக போனி கபூர் தெரிவித்துள்ளாராம்.
அதேபோல் மற்றொரு பிரபல ஊடகம், "ஜான்வியின் தந்தை போனி கபூர், அவரது சகோதரி குஷி கபூர் மற்றும் அவரது காதலர் என கிசுகிசுக்கப்படும் ஷிகர் பஹாரியா ஆகியோர் அவருடன் இருந்து, கவனித்து வருகின்றனர்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு நாள்களுக்கு முன்னர் ஜான்வி கபூருக்கு, ஃபுட்பாய்சன் ஏற்பட்ட நிலையில் தெற்கு மும்பையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதையடுத்து உடல்நலம் தேறி தற்போது வீடு திரும்பியுள்ளார்.
ஜான்விக்கு உடல் நலம் பாதிப்பு
கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து மும்பை திரும்பிய ஜான்வி கபூர், உடல் பலவீனமாக இருந்துள்ளார். இதன்காரணமாக வீட்டை விட்டு வெளியேறாமல் புதன்கிழமையன்று ஓய்வில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து உடல் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
சமீபத்தில் ஜான்வி கபூர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கை என மிகவும் பிஸியாக இருந்துள்ளார். கடந்த வாரம் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் பங்கேற்றார் ஜான்வி கபூர். அத்துடன் தற்போது நடித்து வரும் புதிய படமான உலாஜ் புரொமோஷனிலும் ஈடுபட்டார்.
தொடர் அலைச்சல், பணிச்சுமை காரணமாக சேர்வாக இருந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் ஜான்வி கபூர்
பாலிவுட்டில் இளம் கதாநாயகியாக இருந்து வரும் ஜான்வி கபூர் நடிப்பில் இந்த ஆண்டில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி என்ற படம் வெளியானது. இது தவிர உலாஜ் படத்தில் நடித்திருக்கும் அவர், தெலுங்கு சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
ஜுனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா என்ற படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர், இந்த படத்தை தொடர்ந்து ராம்சரண் தேஜா ஜோடியாக புதிய படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார்.
தமிழிலும் சூர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்தில் ஜான்வி கபூரை நடிக்க வைக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஜான்வி கபூர் சென்னை விசிட்
மும்பையில் வசித்து வந்தாலும் சென்னைக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் ஜான்வி கபூர், அங்கு ரிலாக்ஸாக நேரத்தை செலவிட்டு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். சென்னையில் ஜான்வி கபூர் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூருக்கு சொந்தமாக ஆடம்பர பங்களா ஒன்று உள்ளது. அதைக்கூட சமீபத்தில் பிரபல டிராவல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொதுமக்களும் வாடைகை கொடுத்து தங்கும் விதமாக வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டியை காண்பதற்காக சென்னை வருகை புரிந்த ஜான்வி கபூர், இங்குள்ள முப்பாத்தம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதையடுத்து அதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் ஜான்வி, சென்னையில் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான இடம் என எமோஷனையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜான்வியுடன், முன்னாள் ஹீரோயினும் கருத்தம்மா, உல்லாசம் உள்பட பல்வேறு படங்களில் நடித்த நடிகை மகேஷ்வரியும் கோயிலுக்கு சென்றுள்ளார். இருவரும் கோயில் வாசலில் வைத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/

டாபிக்ஸ்