Ethirneechal 2: குணசேகரன் மாமாவுக்கு பரோல்.. அறிவுக்கரசி போட்ட பிரம்மாஸ்திரம்.. எதிர்நீச்சல் 2 சீரியலின் அப்டேட்
Ethirneechal Thodargiradhu: எதிர்நீச்சல் 2 சீரியலின் பிப்ரவரி 14ஆம் தேதிக்கான அப்டேட் குறித்து பார்ப்போம்.

Ethirneechal Thodargiradhu: சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். அதில் பிப்ரவரி 14ஆம் தேதிக்கான எபிசோட் குறித்து பார்ப்போம்.
இன்றைய எபிசோட்:
எதிர் நீச்சல் தொடர்கிறது சீரியலின் இன்றைய பிப்ரவரி 14ஆம் தேதிக்கான எபிசோட் புரோமோவில், உள்ளே வரும் அறிவுக்கரசி, ‘அம்மாச்சி. குணசேகரன் மாமாவுக்கு பரோல் கிடைச்சிருச்சு’ என்கிறார். அதனை பார்த்து ஜனனி,’எங்களுடைய அப்ரூவல் இல்லாமல் வரமுடியாதே’ என்கிறார்.
நான் குணசேகரன் மாமாவை பார்த்து பேசும்போது கேட்டேன். அவங்க ஒரு ஒரு பாயின்ட்டை சொல்லி என்ன ஆஃப் செய்திட்டாங்க’’ என சொல்லி கண்சிமிட்டுகிறார். அதன்பின், ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா, ஜனனி ஆகியோர் புலம்புகின்றனர்.
அந்த தருணத்தில் ஒரு இளம்பெண் வீட்டுக்குள் மெல்ல வருகிறார். அவர் தான் தர்ஷனின் காதலி. மேலும் அப்பெண் கர்ப்பிணியாக இருப்பதுபோல் மிகவும் சோர்வுடன் காணப்படுகிறார். இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இன்று இரவு 9:30 மணிக்கு ரிலீஸ் ஆகிறது.
நேற்றைய எபிசோடு:
எதிர் நீச்சல் சீரியலில் பிப்ரவரி 13ஆம் தேதி எபிசோடில், ஈஸ்வரி புதியதாக இணைந்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் ஒரு வாடிக்கையாளர் சரியாக பாலிசியைக் கட்டியிருப்பதாகவும், அதை கொடுக்க வேண்டியது நம் கடமை என்றும் தன் மேல் அதிகாரியிடம் சொல்கிறார். அதற்கு அவர், ‘நியாயம் தர்மம் பேச இது ஒன்னும் கோர்ட் கிடையாது. கார்ப்பரேட் சிஸ்டம். முதல்நாளே டென்ஷன் ஆகி வார்த்தையை விடாதீங்க. அது நல்லது இல்ல.போய் அந்த ஆளை கிளம்பச்சொல்லுங்க’ என்கிறார், மேல் அதிகாரி.
அதற்குப் பதில் அளிக்கும் ஈஸ்வரி, ‘இல்லை சார். அவருக்கு சேரவேண்டியது கிடைக்காமல் என்னால் அவரை அனுப்ப முடியாது சார்’என்கிறார். அப்படியென்றால், ’நீங்களும் அவருடன் சேர்ந்து கிளம்பிடுங்க. நான் போர்டில் சொல்லிக்கொள்கிறேன்.நீங்க இந்த வேலைக்கு லாயக்கு கிடையாது. உங்களை கம்பெனிக்கு வேலை செய்ய சொன்னால், வரும் ஆள்களுக்காக வேலை செய்றீங்க. நீங்க கிளம்புங்க’ என்கிறார்.
ஈஸ்வரியிடம் கார்ப்பரேட் சதியை அம்பலப்படுத்தும் ஹெச்.ஆர்:
அந்த இடத்தில் இருக்கும் ஹெச்.ஆர் காயத்ரி, ‘’அபுஜித் ப்ளீஸ் ஹோல்ட் ஆன். அவங்க புரியாமல் பேசுறாங்க. முதல்நாள் தானே’’ எனச் சொல்லிவிட்டு, ஈஸ்வரியை வெளியில் அழைத்து சென்று பேசுகிறார். அப்போது அந்த காப்பீட்டு நிறுவனத்தின் ஹெச். ஆர் காயத்ரியே, ஈஸ்வரியிடம், ‘’ கம்பெனியில் இதெல்லாம் சாதாரணம். இதுக்காக உங்க கேரியரை வீணாக்காதீங்க’’ என்றார்.
மேலும் படிக்க: எதிர் நீச்சல் சீரியல்
மேலும் படிக்க: எதிர் நீச்சல் சீரியல் 2
அதன்பின் பேசும் ஈஸ்வரி, ‘’ என்ன காயத்ரி அந்த மனுஷன் கஷ்டப்பட்டு உழைச்சு, அதில் இருந்து காசு எடுத்து இன்ஸ்யூரன்ஸ் கட்டியிருக்கார். இந்த மாதிரி கஷ்டப்படுற ஆளுக சேமிச்சு வைக்கிறதே பெரிய விஷயமில்லையா?. அவங்களை ஏமாத்துறது ரொம்பப்பெரிய பாவம். பாவம் இருக்கட்டும். போட்ட காசு கொடுக்கலைன்னா எதுக்கு இந்த கம்பெனி நடக்குது. என்ன சிஸ்டம் இது எல்லாம்’’ என்கிறார், ஈஸ்வரி.
அதற்குப் பதிலளிக்கும் ஹெச்.ஆர். காயத்ரி, ‘’நீங்கள் பேசுறது எல்லாம் மனிதாபிமான அடிப்படையில் கரெக்ட் தான். ஆனால் இந்த கம்பெனியில் இது வொர்க் அவுட் ஆகாது. இங்கு காசை உள்ளே வரவைக்கிறது மட்டும் தான் அவங்க நோக்கம். வெளியே போகாமல் பார்க்க என்ன பண்ணமுடியுமோ அதை செய்வாங்க. இந்த பொசிசனுக்கு வருகிறவங்ககிட்ட அழுத்தம் கொடுத்து, வாடிக்கையாளர்கிட்ட சாக்கு சொல்லச்சொல்லி அனுப்பிடுவாங்க. Influence இருக்கிற ஆள்கள் மிரட்டினால் மட்டும் பணம் கொடுத்து செட்டில் பண்ணிடுவாங்க’’என கார்ப்பரேட் கலாசாரத்தை புட்டு புட்டு வைக்கிறார்.
மேலும் படிக்க: எதிர்நீச்சல் 2வில் தற்போதைய நிலை

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்