விஜயின் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. நிஜ தலைவன் யாருக்காக எழுவான்? - பதிலோடு வந்த ஜனநாயகன் கிளிம்ப்ஸ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜயின் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. நிஜ தலைவன் யாருக்காக எழுவான்? - பதிலோடு வந்த ஜனநாயகன் கிளிம்ப்ஸ்!

விஜயின் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. நிஜ தலைவன் யாருக்காக எழுவான்? - பதிலோடு வந்த ஜனநாயகன் கிளிம்ப்ஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 22, 2025 09:53 AM IST

ஜன நாயகன் டீசர்: ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படம் விஜயின் 69 வது படமாக உருவாகி இருக்கிறது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குகள் கடந்த குடியரசு தினம் வெளியாகி கவனம் பெற்றன. அதனை தொடர்ந்து மார்ச் மாதம் ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி 9 அன்று வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

விஜயின் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. நிஜ தலைவன் யாருக்காக எழுவான்? - பதிலோடு வந்த ஜனநாயகன் கிளிம்ப்ஸ்!
விஜயின் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. நிஜ தலைவன் யாருக்காக எழுவான்? - பதிலோடு வந்த ஜனநாயகன் கிளிம்ப்ஸ்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விட்டதால், தற்போது அவர் நடித்து வரும் ஜனநாயகன் படத்தோடு சினிமாவில் இருந்து விலகப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

அரசியல்தான் இனி களம்

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் அவர், தன்னுடைய 51 பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரின் ஜனநாயகன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

நிஜ தலைவன் என்பவன் அதிகாரத்திற்காக எழுபவன் அல்ல. அவன் மக்களுக்கான எழுபவன் என்ற வசனத்தோடு தொடங்கும் டீசரில் விஜய் போலீஸ் அதிகாரியாக என்ட்ரி கொடுக்கிறார். அவருக்கே உரித்தான பாடி லாங்குவேஜோடு நடந்து வரும் விஜய்க்கு அடுத்தடுத்த காட்சிகள் ஆக்‌ஷன் அவதாரத்தை வழங்குகின்றன.

இறுதியில் திரைப்படம் ஜனவரி 9 அன்று வெளியாகிறது என்ற அறிவிப்போடு முடிவடைந்து இருக்கிறது. 1 நிமிடம் 5 நொடிகள் உருவாகி இருக்கும் இந்த டீசரை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படக்குழு விபரம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படம் விஜயின் 69 வது படமாக உருவாகி இருக்கிறது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குகள் கடந்த குடியரசு தினம் வெளியாகி கவனம் பெற்றன. அதனை தொடர்ந்து மார்ச் மாதம் ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி 9 அன்று வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில், அறிவு பாடல்களை எழுதியுள்ளார்.