Jana Nayagan Movie Release Date: தளபதி தரிசனத்திற்கு தயாரா?வந்தது குட் நியூஸ்.. ஜன நாயகன் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jana Nayagan Movie Release Date: தளபதி தரிசனத்திற்கு தயாரா?வந்தது குட் நியூஸ்.. ஜன நாயகன் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?

Jana Nayagan Movie Release Date: தளபதி தரிசனத்திற்கு தயாரா?வந்தது குட் நியூஸ்.. ஜன நாயகன் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Published Mar 24, 2025 06:45 PM IST

Jana Nayagan Movie Release Date: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Jana Nayagan Movie Release Date: தளபதி தரிசனத்திற்கு தயாரா?வந்தது குட் நியூஸ்.. ஜன நாயகன் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?
Jana Nayagan Movie Release Date: தளபதி தரிசனத்திற்கு தயாரா?வந்தது குட் நியூஸ்.. ஜன நாயகன் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?

ஜனநாயகன் ரிலீஸ்

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியாகத நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் ஜன நாயகன் படம் குறித்து பல்வேறு தகவல்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், " அடியும் ஒதயும் கலந்து வச்சு விடிய விடிய விருந்து வச்சா ஜன நாயகன் பொங்கல் என ஹிண்ட் கொடுத்து, பின் வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் உலகெங்கும் ஜன நாயகன் படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.

பரவும் வதந்திகள்

இதற்கிடையில், சமீப நாட்களாக, நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனில் நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்து பணியாற்ற உள்ளார் என்றும், நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ தமிழ் புத்தாண்டை ஒட்டி வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், இது தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

கவனம் செலுத்தும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களே இயக்கி இருப்பினும், அதில் தன் கதை மற்றும் இயக்கத்தால் வெற்றி கண்டவர் இயக்குநர் ஹெச். வினோத். தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் சினிமா மொத்தத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநரான ஹெச். வினோத் தற்போது நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனில் மொத்த கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

கவனம் ஈர்த்த போஸ்டர்

விஜய்யின் கடைசி மற்றும் 69வது படத்தின் பெயர் 'ஜன நாயகன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரே கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், அவர் பொது இடத்தில் நின்று செல்ஃபி எடுப்பது போன்றும் அவருக்கு பின் ஆயிரக் கணக்கானோர் நின்று கோஷமிட்டு குரல் எழுப்பது போன்றும், எம்ஜிஆர் ஸ்டைலில் சாட்டையை சுழற்றி அதில் நான் ஆணையிட்டால் என எழுதிய போஸ்டர்கள் வெளியானது. இந்த போஸ்டர்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

ஹெச். வினோத் விளக்கம்..

இதனால், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகத்தின் கதை அரசியலைத் தொடர்பு கொண்டு தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த சமயத்தில் ஜன நாயகன் படம் பற்றி பேசிய இயக்குநர் ஹெச். வினோத், விஜய் அரசியலுக்கு வந்ததால் இது அரசியல் சம்பந்தமான படமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. ஆனால், இது அரசியல் படமல்ல. இந்தப் படம் எடுக்கும் போதே, என்னுடைய படத்த எல்லா வயசுல இருக்கவங்களும் பாப்பாங்க, எல்லா அரசியல் கட்சிகளும் பார்ப்பாங்க. அதனால இது எல்லாருக்குமான படமா இருக்கணும்ன்னு சொன்னாரு.

200% தளபதி படம்

அதனால, இது அரசியல் கட்சியையோ அரசியல் தலைவரகளையோ தாக்கும் படமாக இருக்காது. இது சில சின்ன சின்ன விஷயங்களை வச்சி எடுத்த 100 சதவீத கமர்சியல் படமா தான் இருக்கும். இது 200 சதவீதம் தளபதி படமா இருக்கும். இது கமெர்சியலாக எல்லாரும் பார்க்கும் வகையிலான படமாக இருக்கும் என்றார்" என்றார்.

ஓடிடி ரைட்ஸ் விற்பனை

ஜன நாயகன் படத்தின் திரையரங்க உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகவும், வெளிநாட்டு உரிமையை பார்ஸ் பிலிம் நிறுவனம் 78 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் முன்னதாக பேச்சுகள் அடிபட்டது.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner