Director Ammer: ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற வீரர்கள்.. அரசிடம் அமீர் வைத்த இரண்டு கோரிக்கைகள்! - முழு விபரம்!
ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டு உட்பிரிவில் சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

இயக்குநர் அமீர் கோரிக்கை!
தமிழக அரசு பணி இட ஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கவும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, அரசு பணி ஒதுக்கிட தமிழக முதல்வருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இயக்குனர் அமீர் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, ஆகியோரது கனிவான கவனத்திற்கு..
வணக்கம்,