49 Years of Athaiya Mamiya: அந்த கால கடைக்குட்டி சிங்கம்! ஜெய்ஷங்கர் - நாகேஷ் காம்போவின் மற்றொரு காமெடி கலட்டா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  49 Years Of Athaiya Mamiya: அந்த கால கடைக்குட்டி சிங்கம்! ஜெய்ஷங்கர் - நாகேஷ் காம்போவின் மற்றொரு காமெடி கலட்டா

49 Years of Athaiya Mamiya: அந்த கால கடைக்குட்டி சிங்கம்! ஜெய்ஷங்கர் - நாகேஷ் காம்போவின் மற்றொரு காமெடி கலட்டா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Aug 16, 2023 06:20 AM IST

ஜெய்ஷங்கர் - நாகேஷ் கூட்டணியில் வெளியான மற்றொரு காமெடி படமாக இருக்கும் அத்தையா மாமியா பட கதை பாணியில் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளன. கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் பாணி ரெண்டு ஹீரோயின், ஒரு ஹீரோ கொண்ட கதை கொண்ட பிளாக் அண்ட் வெர்ஷனாக இந்தப் படம் இருக்கும்.

ஜெய்ஷங்கர் நடித்த காமெடி படம் அத்தையா மாமியா
ஜெய்ஷங்கர் நடித்த காமெடி படம் அத்தையா மாமியா

தனது காமெடி படங்களில் பெரும்பாலும் நாகேஷை இடம்பெற செய்யும் ஜெயஷங்கர், இந்த படத்தில் அவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார். இவர் தவிர தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சச்சு, விஎஸ் ராகவன், மனோரமா, காந்திமதி காமெடிக்கு கியாரண்டி தரக்கூடியவர்கள் படம் முழுவதும் தோன்றி கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் முறைப்பெண்களான பிரியா பவானி ஷங்கர், அர்பிதா பானு ஆகியோர் அவரை காதலிக்க, ஆனால் கார்த்தியோ சாயிஷா மீது காதல் வயப்படுவார்.

இந்த ஒன்லைன் தான் ஜெய்ஷங்கர் நடித்து காமெடி படமாக வெளியாகி வெற்றி பெற்ற அத்தையா மாமியா படத்தின் முழுக்கதையே. அமெரிக்க ரிட்டர்ன் ஜெய்ஷங்கரை மாப்பிள்ளையாக்க அவரது தந்தையின் சகோதரி மனோரமா, தாய் சகோதரர் தேங்காய் சீனிவாசன் முயற்சிக்கிறார். இந்த சூழ்நிலையில் நடிகையாக வரும் எம்என் ராஜம் மகளான உஷா நந்தினியை ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட விஷயத்தை போட்டு உடைக்கிறார் ஜெய்ஷங்கர். இறுதியில் உஷா நந்தினி பற்றி திருப்புமுனையுடன் படத்தை சுபம் போட்டு முடித்திருப்பார்கள்.

காசேதான் கடவுளடா மாபெரும் வெற்றிக்கு பின்னர் அதேபோல் காமெடி பாணியில் இயக்குநர் சித்ராலயா கோபு, அத்தையா மாமியா படத்தை இயக்கியிருந்தார். சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்த இந்த படம் 10 வாரங்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சூதாட்டத்தில் வென்ற பணத்தை வைத்து உருவாக்கினார் என்ற சுவாரஸ்ய பின்னணியும் உள்ளது.

படத்தில் காமெடி கலந்த வில்லனாக கெளரவ வேடத்தில் தோன்றி, கிளைமாக்ஸில் திருப்புமுனை தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஸ்ரீகாந்த். வாலி பாடல் வரிகளில் எம்எஸ் விஸ்வநாதன் இசைமைப்பில் மூன்று பாடல்கள் படத்தல் இடம்பிடித்திருக்கும். இந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

ப்ரைடே நாயகனான ஜெய்ஷங்கர், 1974ஆம் ஆண்டில் நடித்த 13 படங்களில் சூப்பர் ஹிட்டாக அமைந்த அத்தையா மாமியா வெளியாகி இன்றுடன் 49 ஆண்டுகள் ஆகிறது. டைம் பாஸ் படத்தை பார்க்க விரும்புகிறவர்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு படமாக இந்தப் படம் இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.