Shiva Rajkumar: பதைபதைக்க வைத்த ராஜ்குமார் கடத்தல்.. ரஜினி சார் உறுதுணையா இருந்தார் - சிவராஜ் குமார் பேட்டி!
தன்னுடைய அப்பாவை வீரப்பன் கடத்திச் சென்ற போது தானும் தன் குடும்பமும் அதை எப்படி அணுகினோம் என்பது குறித்து சிவராஜ்குமார் பேசியிருக்கிறார்.

காடுகளில் உள்ள சந்தன மரக்கட்டைகளை கடத்தியதோடு அதை தடுக்க வந்த அதிகாரிகளையும் கொன்று வீழ்த்தியவன் வீரப்பன். இவன் கடந்த 2000 ஆம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்த சிவராஜ் குமாரை கடத்திச் சென்றான். இந்தக்கடத்தில் இரு மாநிலங்களையும் பதைபதைக்க வைத்தது.
கிட்டத்தட்ட 108 நாட்கள் காட்டிலேயே அவரை வைத்திருந்த வீரப்பன் அதன் பின்னர் அவரை விடுவித்தான். அந்த சமயத்தில் கடந்த கஷ்டங்களைப் பற்றி சிவராஜ்குமார் பேசும் போது, “"வீரப்பன் என்னுடைய அப்பாவை கடத்திச் சென்றபோது எங்களுக்கு பல இடத்திலிருந்து ஆதரவு வந்தது. தமிழ் திரைப்பட துறை, கன்னட திரைப்பட துறை மட்டுமல்லாமல் பாலிவுட், டோலிவுட் என அனைவரும் எங்களுக்காக குரல் கொடுத்தார்கள்.
எங்களுக்கு அரசாங்கமும் மிகுந்த துணையாக இருந்தது தமிழ்நாடு அரசும் சரி, கர்நாடகா அரசும் சரி. முழு ஒத்துழைப்பு தந்தது. எங்களுக்கு அந்த விஷயத்தில் அவர்கள் அப்படி உதவினார்கள். அது இல்லை என்றால் நிச்சயமாக எங்களால் எதுவும் செய்திருக்க முடியாது. அந்த சமயத்தில் ரஜினி சார் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்” என்றார்
மேலும் அப்பா புனித் உள்ளிட்டவர்களின் இழப்பு பற்றி பேசிய சிவராஜ்குமார், “ எனக்கு அது மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. நாங்கள் நினைத்துக் கொண்டோம் அப்பா அம்மா என்றால் ஒரு நூறு வருஷம் இருப்பார்கள் என்று.
எங்கள் வீட்டில் அது போன்று நடக்கும் என்று நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாம் வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆக வேண்டும். நம்மை விட்டுச் சென்ற ஆத்மா, நான் இப்படிப்பட்ட கஷ்டத்தை அவனுக்கு கொடுத்து விட்டேனே என்று கஷ்டப்பட்டு விடக்கூடாது. அதனால் அந்த கஷ்டத்தை நான் அவர்களுக்கு கொடுக்கக் கூடாது நாம் ஏன் அவர் இல்லை என்று நினைக்க வேண்டும். அவர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள்” என்றார்.
நன்றி இந்தியா கிளிட்ஸ்!

டாபிக்ஸ்