Jailer 2 Teaser: ‘ஃப்ரேம் பாருங்க ஜி’; பற்ற வைத்த நெல்சன்; எரிமலையாய் வெடித்த ரஜினி; ஜெயிலர்2 நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்ஸ்
ஜெயிலர் 2 டீசர் புரோமோவிற்கு நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்ஷன்களை இந்தக்கட்டுரையில் தொகுப்பாக பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், 2023ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம், ஜெயிலர். இப்படத்தில் மோகன் லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, விநாயகன் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் ஆகியவை பெரியளவில் ஹிட் ஆகின.
இந்நிலையில் படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்தபின்னும் வசூலில் இந்தியா முழுக்க ஜெயிலர் சக்கைப்போடுபோட்டது. இந்த நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறி நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட டீசரும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜெயிலர் 2 அறிவிப்பிற்கு நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்ஷன்களை இங்கே பார்க்கலாம்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்