Jailer 2 Movie Update: முத்துவேல் பாண்டியன் பராக்.. நேர்கோட்டில் நெல்சன்.. ஜெயிலர் 2 திரைப்பட அப்டேட்!
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

நடிகர் ரஜினி நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் சிவராஜ் குமார், ஜாக்கி ஜெராஃப் மற்றும் சுனில் உட்பட பலரும் நடித்திருந்தனர். தமன்னா காவாலா பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
வசூலில் சக்கை போடு போட்ட ஜெயிலர் 2
இந்தப்படம் வசூலில் சக்கை போடு போட்டு, 650 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இயக்குநர் நெல்சனின் திரைப்பட வாழ்க்கையிலும் பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது. ஜெயிலர் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பிடிஎஸ் வீடியோவையும் வெளியிட்டது.
ஷூட்டிங் தொடங்குகிறது
இந்த நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், முத்துவேல் பாண்டியன் வேட்டையை துவங்கிவிட்டார். ஜெயிலர் 2 ஷூட்டிங் இன்றிலிருந்து ஆரம்பமாகிறது’ என்று பதிவிட்டு இருக்கிறது.
Coolie Movie Update: இறுதி கட்டத்தில் கூலி.. அப்டேட் தந்த ஸ்ருதி.. குஷியில் ரசிகர்கள்..
நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அண்மையில் அவர் தெரிவித்து இருந்தார். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர்கள் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, அமீர் கான், சவுபின் சாஹிர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
அண்மையில் இந்தப்படத்தில் பூஜாஹெக்டே இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடிய காவாலா பாடல் ஹிட் அடித்தது போல, இந்தப்படத்திலும் ஒரு ஐட்டம் சாங் இருப்பதாவும், அதில் பூஜா ஹெக்டே ஆடியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
'கூலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சௌபின் சாஹிர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேசி இருந்தார்.
இது குறித்து அதில் அவர் பேசும் போது, ‘ ரஜினிகாந்த் இந்த வயதிலும் படப்பிடிப்பில் அவ்வளவு ஒழுக்கமாக இருக்கிறார். ஆடைகளை மாற்றிக்கொள்வது, சாப்பிடுவது, சுற்றுவட்டாரத்தில் சரியான சூழ்நிலை இல்லாத போது மட்டும்தான் அவர் கேரவனுக்குச் செல்வார். லோகேஷ் கனகராஜ் டேக் என்று சொன்னவுடன் அவர் இயல்பாகவே ஸ்டைல் மன்னனாக மாறி விடுவார்’ என்று பேசினார்.
மேலும் படிக்க | Rajinikanth: க்ரயா யோகா ஒரு ரகசிய டெக்னிக்.. அந்த பவர் தெரிஞ்சவங்களுக்கு தெரியும் - ரஜினிகாந்த் ஷேரிங்ஸ்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
