Villain Actor Vinayagan: பொது வெளியில் ஆபாசம்! மன்னிப்பு கேட்ட ரஜினி பட வில்லன்..
Villain Actor Vinayagan: தனது பணியாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அளவுக்கு அதிகமாக குடித்திருந்த நடிகர் விநாயகன் ஆபாசமாக பேசி நடந்துகொண்ட வீடியோ வைரலான நிலையில் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டார்.

Villian Actor Vinayagan: ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மற்றும் சமீபத்தில் வெளியான மிகவும் வன்முறை நிறைந்த மலையாளப் படமான மார்கோலில் நடித்து பிரபலமானவர் விநாயகன். இவர் குடித்து விட்டு மோசமாக நடந்துகொண்டதாக சில பிரச்சனைகள் வெளியான நிலையில் இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பணியாளருடன் வாக்குவாதம்
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற விநாயகன், தன் வீட்டில் தனது பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமமூக வலைத்தளங்களில் வைரலாகின.
விநாயகனின் அதிர்ச்சி வீடியோ
தனது வீட்டு பால்கனியில் இருந்த விநாயகன், பணியாளருடன் சண்டையிடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர் ஆபாசமாக நடந்து கொள்வதும் வீடியோவில் காணப்படுகிறது. குடி போதையிலேயே பேசிக் கொண்டிருந்தவர் சிறிது நேரத்தில் கீழே விழுந்து மீண்டும் எழுந்தார். அப்போதும் நிதானமின்றி கூச்சலிட்டார்.