Sukanya on Ayodhya: அயோத்தி ராமருக்கு சுகன்யா கொடுத்த காணிக்கை! - முழு விபரம்!-jai shri ram a song penned composed and sung by actress sukanya to celebrate the inaugural of ram temple in ayodhya - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sukanya On Ayodhya: அயோத்தி ராமருக்கு சுகன்யா கொடுத்த காணிக்கை! - முழு விபரம்!

Sukanya on Ayodhya: அயோத்தி ராமருக்கு சுகன்யா கொடுத்த காணிக்கை! - முழு விபரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 20, 2024 06:33 PM IST

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பதை முன்னிட்டு நடிகை சுகன்யா ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார்.

சுகன்யாவின் புது முயற்சி!
சுகன்யாவின் புது முயற்சி!

பக்தி ரசம் சொட்டும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பாடும் வகையில் அமைந்துள்ளதாக சுகன்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆடியோ வடிவில் முதலில் வெளியிடப்பட உள்ள 'ஜெய் ஸ்ரீ ராம்' பாடல் விரைவில் வீடியோவாகவும் வெளியாக உள்ளது.

பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட உள்ளன. இப்பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி. சத்யா  செய்துள்ளார். பாடலின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சுகன்யா பேட்டி!

பாடல் குறித்து பேசிய நடிகை சுகன்யா, "500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது, என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த பாடலை சமர்பிக்கிறேன்," என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "ஸ்ரீ ராமரின் நாம மகிமை, அவரது பராக்கிரமம், ராமாயண சுருக்கம் மற்றும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோயிலை நாமும் காணும் பாக்கியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது," என்றார்.

'ஜெய் ஸ்ரீ ராம்' பாடலுக்கு பங்களித்த இசை வாத்திய கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்ததோடு ஸ்ரீ ராமரின் பரிபூரண அருள் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுவதாகாவும் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.